பயிர் காப்பீடு என்கிற பெயரில் தமிழ்நாட்டில் மட்டும் ரூ.5000/- கோடி கார்ப்பரேட் நிறுவனங்கள் அபகரித்துக் கொள்வதற்கு வழி வகுக்கிறது என மன்னார்குடியில் பி.ஆர்.பாண்டியன் குற்றச்சாட்டு. - தமிழக குரல் - திருவாரூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Thursday 26 September 2024

பயிர் காப்பீடு என்கிற பெயரில் தமிழ்நாட்டில் மட்டும் ரூ.5000/- கோடி கார்ப்பரேட் நிறுவனங்கள் அபகரித்துக் கொள்வதற்கு வழி வகுக்கிறது என மன்னார்குடியில் பி.ஆர்.பாண்டியன் குற்றச்சாட்டு.


திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் மன்னார்குடியில் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது, தமிழ்நாட்டில் தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழையின் காரணமாக தொடர்ந்து விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது.

காலநிலை மாற்றத்தால் உலகமே பேரழிவை சந்திக்கிற நிலையில் முதலில் காவிரி டெல்டாவில் விவசாயம் முதல் இலக்காக பாதிக்கப்படுகிறது இந்த நிலையில் விவசாயம் செய்து மகசூல் இழப்பை சந்திக்கிற விவசாயிகளுக்கு காப்பீடு திட்டத்தில் சட்டமாக கொண்டு வந்து தேசிய வேளாண் காப்பீட்டு நிறுவனம் என்கிற ஒரு திட்டத்தை அறிமுகப்படுத்தி அதன்மூலம் காப்பீடு செய்யப்பட்டு வந்தது.


கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் மத்திய அரசு மேம்படுத்தப்பட்ட பிரதமர் காப்பீடு திட்டம் என்கிற பெயரில் 20 கார்ப்பரேட் நிறுவனங்களை காப்பீடு திட்டத்தில் அனுமதித்து விவசாயிகள் என்கிற பெயரில் ஆண்டுதோறும் தமிழ்நாட்டில் மட்டும் ரூ 5000 கோடி கார்ப்பரேட் நிறுவனங்கள் அபகரித்துக் கொள்வதற்கு வழி வகுக்கிறது.


பாதிக்கப்படும் விவசாயிகளுக்கு உரிய இழப்பீட்டை அறுவடை ஆய்வறிக்கையில் காப்பீடு செய்யாமல் தற்காலிக பணியாளர்கள் மூலம் அறுவடை ஆய்வறிக்கை மேற்கொண்டு காப்பீட்டு நிறுவனங்கள் தங்கள் விருப்பத்திற்கு இழப்பீட்டை நிர்ணயம் செய்து மத்திய , மாநில அரசுகள் கொடுக்கக்கூடிய வேளாண் காப்பீட்டு பீரிமியம் தொகை முழுமையையும் தவறான வகையில் அபகரிக்கிறார்கள். 


இதிலிருந்து மாற்றம் கொண்டு வர வேண்டும் 2023 2024 ஆம் ஆண்டு காவிரி டெல்டா மிகப்பெரிய வறட்சியால் மகசூல் இழப்பை சந்தித்து இருக்கிறார்கள் சென்ற ஆண்டு மேட்டூர் அணை ஆகஸ்ட் மாதமே மூடப்பட்டது. வடகிழக்கு பருவமழையும் குறைந்தது இந்த நிலையில் இழப்பீட்டிற்கான ஆய்வு அறிக்கையை மாவட்ட ஆட்சியர்கள் தலைமையில் பேரிடர் மேலாண்மை குழு  மழை அளவை கணக்கில் கொண்டு மறு ஆய்வு செய்து உரிய இழப்பீட்டை வழங்குவதற்கு பிரதமரிடம் முதலமைச்சர் வலியுறுத்த வேண்டும்.


இது குறித்து விரிவான கடிதத்தை காப்பீட்டு நிறுவனத்தின் உடைய மேலாண்மை இயக்குனர் தலைவர் ரித்தீஷ் சௌகானுக்கு எங்கள் சங்கத்தில் சார்பில் கடிதம் எழுதி இருக்கிறோம் அந்த கடிதம் மூலமும் விரிவாக எடுத்துரைக்கிறோம் காவிரியின் குறுக்கே ராசி மணல் அணை கட்ட வேண்டும் என்ற கோரிக்கை தீவிரம் அடைந்து இருக்கிறது. தமிழ்நாட்டில் அனைத்து அரசியல் கட்சிகளும் ஒத்த கருத்தோடு அதனை நிறைவேற்றுவதற்கு முன் வந்திருக்கிறது தமிழ்நாடு அரசின் நீர் பாசனத்துறை அமைச்சர் துரைமுருகன் அவர்களும் திட்டம் சாதகமான ஒன்று இதனை உடனடியாக நிறைவேற்றுவதற்கு முதலமைச்சர் அமெரிக்க சுற்றுப் பயணம் முடிந்த பிறகு உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.


இதுவரையிலும் இந்த திட்டம் குறித்து முதலமைச்சர் வாய் திறக்கவில்லை இந்த நிலையில் பிரதமரை சந்திக்கிற பொழுது ஆசி மணல் அண்ணன் கட்டுவதற்கு அனுமதியை அவர் கோரி பெற வேண்டும் என்று நாங்கள் வலியுறுத்துகிறோம் என்றார் .


-திருவாரூர் மாவட்ட செய்தியாளர் தருண்சுரேஷ் 

No comments:

Post a Comment

Post Top Ad