திருவாரூரில் கொலை வழக்கில் தொடர்புடைய ரௌவுடியை சுட்டுப் பிடித்த காவல்துறையினர். - தமிழக குரல் - திருவாரூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Friday, 16 August 2024

திருவாரூரில் கொலை வழக்கில் தொடர்புடைய ரௌவுடியை சுட்டுப் பிடித்த காவல்துறையினர்.


திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி களப்பால் பகுதியை சேர்ந்த மாரிமுத்து என்பவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு மர்ம நபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான மனோ நிர்மல் ராஜ் மற்றும் அவரது நண்பர்கள் ஷியாம், தயாநிதி, மாறன், தென்னரசு, மாணிக்கம் உள்ளிட்ட ஆறு நபர்களை  காவல்துறையினர் தீவிரமாக தேடி வந்தனர். 

இந்த நிலையில் நீடாமங்கலம் அருகே ஆதனுர் பகுதியில் காவல்துறையினர் சோதனை மேற் கொண்ட போது நீடாமங்கலம் உதவி ஆய்வாளர் சந்தோஷ் குமார் தலைமையான காவல்துறையினர் ஐந்து பேரை கைது செய்தனர். அப்போது தப்பி ஓடிய மனோ நிர்மல் ராஜை பிடித்த காவலர் விக்னேஷை, தன்னிடம் இருந்த அறிவாளால் மனோ நிர்மல்ராஜ் வெட்டி விட்டு தப்பி ஓட்டினார். இதனையடுத்து நீடாமங்கலம் உதவி ஆய்வாளர் சந்தோஷ்குமார் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டு முன்னெச்சரிக்கை விடுத்தும், அதனை பொருட்படுத்தாமல் மனோ நிர்மல் ராஜ் தப்பிச் சென்றார். 


இதனை அடுத்து மனோ நிர்மல்ராஜின் வலது காலில் துப்பாக்கியால் சுட்டார் நீடாமங்கலம் ஆய்வாளர் சந்தோஷ் குமார். மனோ நிர்மல்ராஜ் மற்றும் காவலர் விக்னேஷ் இருவரும் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.


-திருவாரூர் மாவட்ட செய்தியாளர் தருண்சுரேஷ் 

No comments:

Post a Comment

Post Top Ad