திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே தென்பரை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மற்றும் அரசு உயர்நிலைப்பள்ளியில் நடைபெற்ற 78 வது சுதந்திர தின விழாவில் ஊராட்சி மன்றத் தலைவர் திரு கா.இளையராஜா தேசியக்கொடி ஏற்றி வைத்தார். நிகழ்ச்சியில் திருவாரூர் மாவட்ட கல்வி நிலைக்குழுத் தலைவர் கலைவாணி மோகன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்பித்தார்.
அதனை தொடர்ந்து பெண்கள் கபடிப் போட்டியில் தாலுக்கா அளவில் இரண்டாமிடம் பெற்ற மாணவிகளுக்கு பதக்கம், மற்றும் சான்றிதழ் வழங்கி சிறப்பித்தனர். இதில் ஆசிரியை ,ஆசிரியர்கள்,பெற்றோர்கள் பொதுமக்கள், மாணவ மாணவியர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
-திருவாரூர் மாவட்ட செய்தியாளர் தருண்சுரேஷ்
No comments:
Post a Comment