அப்பொழுது அவர் செய்தியாளர்களை சந்தித்து தெரிவித்தாவது...மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அறிவுறுத்தலின்படி போதை ஒழிப்பு திட்டத்திற்கு முழு ஒத்துழைப்பு அளிக்கப்படும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
மேலும், மருந்து வணிகர்களுக்கு EB-யில் மின் கட்டண சலுகை வழங்கிட வேண்டும் அதாவது வீட்டு முறைப்படி கணக்கிட பட வேண்டும், மத்திய அரசு தொடர்ந்து ஆன்லைன் மருந்து விற்பனைக்காக சட்ட முன் வடிவு ஏற்ற முயற்சி மேற்கொண்டு வருகிறது.
அந்த முயற்சி ஏற்றப்பட்டால் அதனை எதிர்த்து அகில இந்திய அளவில் போராட்டம் நடத்த வேண்டும் என்ற தீர்மானமும். அது மட்டும் இல்லாமல் பார்மசி கவுன்சில் ஆப் இந்தியா என்ற அமைப்பை மாற்றி பார்மசி கமிஷன் ஆப் இந்தியா என்ற ஒரு அமைப்பை கொண்டு வருவதற்கான முயற்சியில் ஒன்றிய அரசு ஈடுபட்டு வருவது அதனை உடனடியாக நிறுத்த வேண்டும் எனவும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது என தெரிவித்தார்.
-திருவாரூர் மாவட்ட செய்தியாளர் தருண்சுரேஷ்
No comments:
Post a Comment