திருவாரூர் அருகே நுரையீரல் பாதிக்கப்பட்ட தூய்மை பணியாளர் குடும்பத்திற்கு 1 லட்சம் ரொக்க ரூபாய் பணம் நிதிஉதவி. - தமிழக குரல் - திருவாரூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Monday, 8 July 2024

திருவாரூர் அருகே நுரையீரல் பாதிக்கப்பட்ட தூய்மை பணியாளர் குடும்பத்திற்கு 1 லட்சம் ரொக்க ரூபாய் பணம் நிதிஉதவி.


திருவாரூர் மாவட்டம் தீபங்குடி பகுதியை சேர்ந்தவர் சந்திரசேகரன் செம்மங்குடி ஊராட்சியில் தற்காலிக தூய்மை பணியாளராக பணி புரிந்து வந்த இவர் தனது சிறு வயது முதலே நுரையீரல் கோளாறால் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்து வந்துள்ளார்.

இவரது மனைவி செல்வகுமாரி அக்கம் பக்கத்தில் வீட்டு வேலை செய்து அதன் மூலம் வரும் சொற்ப வருமானத்தில் குடும்பத்தை நடத்தி வந்துள்ளார் . இவர்களது ஒரே மகளான சந்தியா , திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்தில் பிகாம் மூன்றாண்டு பயின்று வருகிறார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சந்திரசேகரனின் நுரையிரல் குறைபாடு காரணமான உடல்நிலை மோசமடைந்து இருமும் போது ரத்தமும் சேர்ந்து வந்துள்ளது . சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவமனையிலும் மேல்சிகிச்சைக்காக பாண்டிச்சேரி ஜிப்மரிலும் சிகிச்சை மேற்கொண்டுவந்தார்.


திருவாரூரில் இருந்து பாண்டிச்சேரிக்கு பயண செலவு, மருந்து மாத்திரை செலவு மற்றும் அன்றாட செலவுகளை சமாளிக்க முடியாமல் சந்திரசேகரனின் குடும்பத்தார் திணறி வந்துள்ளனர். கடந்த 2 மாதங்களுக்கு மேலாக சந்திரசேகரனும் அவரது மனைவி செல்வகுமாரியும் தங்களது வேலைக்கு செல்ல இயலாத காரணத்தால் மாத வருமானமும் தடைபட்டு அவர்களது குடும்பம் தவித்து வந்துள்ளது.


மேலும் இவர்களது ஒரே மகளான சந்தியாவின் கல்லூரி கல்வி கட்டணமும் செலுத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது .  பணமில்லாததால் எங்கே தனது கணவரின் உயிரையும் மகளின் படிப்பையும் ஒரு சேர காப்பாற்ற இயலாமல் போய்விடுமோ தவித்த தாய் செல்வகுமாரி உதவி கோரி விண்ணப்பித்திருந்தார்.


இதனையடுத்து ஜோதி அறக்கட்டளை  குழுவினர் இன்று அவர்களை நேரில் சந்தித்து ரூபாய் 1 லட்சம் மதிப்பில் ரொக்கத்தொகை , மளிகை பொருட்கள் , அரிசி , காய்கறி தொகுப்பு உள்ளிட்ட நலத்திட உதவிகளை வழங்கினர் .தகுந்த நேரத்தில் உதவி செய்த ஜோதி அறக்கட்டளை நிர்வாகிகளுக்கு சந்திரசேகரன் குடும்பத்தார் நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை ஜோதி அறக்கட்டளை செயலளர் பிரபு ராஜ்குமார் மேற்பார்வையில் அறக்கட்டளை மேலாளர் ஞானசுந்தரி , கல்யாண சுந்தரம் உள்ளிட்டோர் செய்திருந்தனர்


-திருவாரூர் மாவட்ட செய்தியாளர் தருண்சுரேஷ் 

No comments:

Post a Comment

Post Top Ad