சாபவிமோஷனம் அளிக்கும் சேகரை ஸ்ரீமஹாமாரியம்மன் ஆலய மகா கும்பாபிஷேகம்: ஏராளமான பக்தர்கள் வழிபாடு. - தமிழக குரல் - திருவாரூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Wednesday 3 July 2024

சாபவிமோஷனம் அளிக்கும் சேகரை ஸ்ரீமஹாமாரியம்மன் ஆலய மகா கும்பாபிஷேகம்: ஏராளமான பக்தர்கள் வழிபாடு.


திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூரை அடுத்த சேகரை கிராமத்தில் அருள்பாலிக்கும்  அருள்மிகு ஸ்ரீமஹாமாரியம்மன் ஆலயத்தின் அஷ்ட பந்தன மகா கும்பாபிஷேகம் இன்று சிறப்பாக நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.


திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூரை அடுத்த சேகரை கிராமத்தில் அருள்பாலிக்கும் அருள்மிகு ஸ்ரீமஹாமாரியம்மன் ஆலயம் தொன்மை சிறப்புமிக்க முன்னோர் சாபங்களில் இருந்து சாபவிமோஷனம் அளிக்கும் ஸ்தலமாக விளங்குகிறது.  இவ்வாலயம் சிதலம் அடைந்திருந்த நிலையில் பல லட்சம் செலவில் புனரமைக்கப்பட்டு. 


கடந்த சில ஆண்டுகாலமாக திருப்பணி வேலைகள் நடைபெற்று வந்தன. இதனை தொடர்ந்து இவ்வாலயத்தின் மகா குடமுழுக்கு விழா இன்று நடைபெற்றது.  குடமுழுக்கு விழாவினையொட்டி கடந்த  3 தினங்களாக 6 கால யாகசாலை பூஜைகள் ஏராளமான வேத விற்பன்னர்களைக்கொண்டு நடைபெற்றது.

6ம் கால யாகசாலை பூஜையின் நிறைவாக மகாபூர்ணாஹூதி பூஜை நடைபெற்றது.  பின்னர் யாகசாலையில் இருந்து புனித தீர்த்த கடங்களை சிவாச்சாரியார்கள் தலையில் சுமந்து ஆலயத்தினை வலம்வந்து  மூலஸ்தான கோபுர விமான கலசம், மற்றும் ஸ்ரீசித்தி விநாயகர், ஸ்ரீவலம்புரி விநாயகர், ஸ்ரீபெரியாச்சி, ஸ்ரீமதுரைவீரன் முதலான ஆலயத்தின் பிற சன்னதி விமான கலசங்களுக்கு சிறப்பு பூஜை நடத்தினர்.  


இதனை தொடர்ந்து சிவாச்சாரியார் அனைத்து கோபுர விமான கலசங்கள் மீது புனிதநீரை ஊற்றி கும்பாபிஷேகத்தை செய்துவைத்தனர். தொடர்ந்து மூலஸ்தானத்தில் அருள்பாலிக்கும் ஸ்ரீமஹா மாரியம்மனுக்கு மகா அபிஷேகம் நடைபெற்று மஹா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து ஆலய பிரகாரங்களில் உள்ள சன்னதிகளில் அருள்பாலிக்கும் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்று தீபாராதனை காண்பிக்கப்பட்டது.  


முன்னதாக  யாக சாலை பூஜை க்கான   காவிரி நீரை வெண்ணாற்றிலிருந்து  யானை , பசுமாடு  மற்றும் குதிரை புடைசூழ  ஆயிரக்கணக்கான பக்தர்கள் தலையில் சுமந்து வந்த காவிரி நீரை  யாக சாலைக்கு கொண்டு வந்த சேர்த்தனர் 


-திருவாரூர் மாவட்ட செய்தியாளர் தருண்சுரேஷ்

No comments:

Post a Comment

Post Top Ad