திருவாரூர் புதிய ரயில் நிலையம் முன்பு உலக மக்கள் தொகை தினத்தை முன்னிட்டு தாய்மார்களின் நல்வாழ்விற்கும், குழந்தைகளின் ஒளிமயமான எதிர்காலத்திற்கும், மக்கள் தொகை பெருக்கத்தினை கட்டுப்படுத்த வேண்டும் உள்ளிட்ட உறுதிமொழியினை மாவட்ட ஆட்சியருடன் கல்லூரி மாணவிகள், அரசு அலுவலர்கள் சமூக ஆர்வலர்கள் ஏற்றுக்கொண்டனர், அதனை தொடர்ந்து திருவாரூர் ரயில் நிலையத்திலிருந்து உலக மக்கள் தொகை தின விழிப்புணர்வு பேரணியை திருவாரூர் மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ கொடியசைத்து துவக்கி வைத்தார்.
இப்பேரணியில் மக்கள் தொகை பெருக்கத்தை குறைப்போம், இரு குழந்தைக்கு மேல் வேண்டாம், சிறு குடும்பமே நல்ல எதிர்காலம், சரியான வயதில் திருமணம் உள்ளிட்ட விழிப்புணர்வு வாசகம் எழுதிய பதாகைகளை கல்லூரி மாணவிகள் ஏந்தியபடி திருவாரூர் முக்கியவீதிகள் வழியாக பூங்கா வரை பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திச் சென்றனர், இதில் 300க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவிகள் கலந்து கொண்டனர்.
-திருவாரூர் மாவட்ட செய்தியாளர் தருண்சுரேஷ்
No comments:
Post a Comment