திருவாரூரில் மக்களுடன் முதல்வர் திட்டம் முகாம் தனியார் அரங்கில் நடைப்பெற்றது இம்முகாமினை திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கே.கலைவாணன் கலந்துக் கொண்டு குத்துவிளக்கேற்றி வைத்து நிகழ்ச்சியை தொடங்கிவைத்தார். இதில் மக்களுடன் முதல்வர் திட்டம் முகாம்களில் திருவாரூர் ஊராட்சி ஒன்றியத்தில் புலிவலம் ஊராட்சியில் புலிவலம் , தண்டலை, பெருங்குடி , வேலங்குடி உள்ளிட்ட 4 கிராம ஊராட்சியில் உள்ள கிராம மக்களின் கோரிக்கைளை ஏற்று பதிவு செய்தனர்.
இதில் பட்டா மாறுதல், மகளிர் உதவித்தொகை, கலைஞர் கனவு இல்லம், விடியல் பயணத்திட்டம், புதுமைப்பெண் திட்டம், கல்வி உதவித்தொகை, முதியோர் உதவித்தொகை ஆதரவற்றோர் உதவித்தொகை குடும்ப அட்டை, மின்சார இணைப்பு , வேலை வாய்ப்பு , நலவாரியம் பதிவு செய்தல் உள்ளிட்ட தேவைகள் அடங்கிய மனுக்களை 1000 த்திற்கும் மேற்பட்ட கிராம மக்கள் வருகை தந்து மக்களுடன் முதல்வர் முகாமில் துறை சார்ந்த அலுவலர்களிடம் வழங்கி கணணியில் பதிவு செய்தனர்,
தொடர்ந்து மக்களுடன் முதல்வர் முகாமில் அனைத்துதுறை அரங்குகளை பார்வையிட்டு பொதுமக்கள் வழங்கும் கோரிக்கை மனுக்களுக்கு உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அலுவலர்களிடம் சட்டமன்றஉறுப்பினர் தெரிவித்தார், மேலும் இம்முகாமில் சமூக நலத்துறை மூலம் பெண்களுக்கு தையல் இயந்திரத்தை சட்டமன்ற உறுப்பினர் பூண்டிகலைவாணன் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் சண்முகநாதன், கோட்டாட்சியர் சங்கீதா, ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர் புலிவலம் தேவா, மாவட்ட ஊராட்சி துணைத்தலைவர் சேகர் கலியபெருமாள், வட்டாட்சியர் செந்தில்குமார். வட்டார வளர்ச்சிஅலுவலர் (கிராம ஊராட்சி) பிரகாஷ், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ஆனந்த் மற்றும் ஊரக வளர்ச்சி துறை, உள்ளாட்சித்துறை ஊரக செயலாளர்கள், வருவாய்த்துறை, உள்ளாட்சி பிரதிநிதிகள், அனைத்துத் துறை அலுவலர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
-திருவாரூர் மாவட்ட செய்தியாளர் தருண்சுரேஷ்.
No comments:
Post a Comment