திருத்துறைப்பூண்டியில் டெல்டா ரோட்டரி சங்கத்தின் 2024-2025 ஆம் ஆண்டிற்கான புதிய நிர்வாகிகள் பணி ஏற்பு விழா. - தமிழக குரல் - திருவாரூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Saturday 6 July 2024

திருத்துறைப்பூண்டியில் டெல்டா ரோட்டரி சங்கத்தின் 2024-2025 ஆம் ஆண்டிற்கான புதிய நிர்வாகிகள் பணி ஏற்பு விழா.


திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் டெல்டா ரோட்டரி சங்கத்தின் 2024-2025 ஆம் ஆண்டிற்கான புதிய நிர்வாகிகள் பணி ஏற்பு விழா இன்று நடைபெற்றது. இவ்விழாவில் வரவேற்புரை 2023 24 ஆம் ஆண்டின் தலைவராக பொறுப்பு வகித்த மாணிக்கவாசகம் அவர்கள் 2023 -24 ஆம் ஆண்டின் செயலாளர் அகிலன் அவர்கள் சென்ற ஆண்டு செய்த சேவைகளை  பட்டியலிட்டு எடுத்துரைத்தார். 

இந்நிகழ்வில்  சிறப்பு விருந்தினராக மாவட்டம் 2981 முன்னாள் மாவட்ட ஆளுநர் ரொட்டேரியன் பாலாஜி பாபு அவர்கள் கலந்துகொண்டு புதிய தலைவர் பாலமுருகன் அவர்களை பணியில் அமர்த்தி சிறப்புரை வழங்கினார்.


அதேபோல் செயலாளராக அழகரசன் அவர்களும் பொருளாளராக செல்வகணபதி அவர்களும் பணியை ஏற்றுக்கொண்டனர்.  திருத்துறைப்பூண்டி டெல்டா ரோட்டரி சங்கத்தில் புதிய உறுப்பினர்களை இணைத்து வைத்து மண்டலம் 4-கின் உதவி ஆளுநர் ரஜினி ஜின்னா அவர்கள்  வாழ்த்துரை வழங்கினார்கள்.


இந்நிகழ்வில் திருத்துறைப்பூண்டி டெல்டா ரோட்டரி சங்கம் சார்பில் சேவை திட்டங்களாக திருத்துறைப்பூண்டி வித்வான் மானைக்கால் அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிக்கு கரும்பலகை மற்றும் வர்ணம் பூசுவதற்கு ரூபாய் 25,000 காசோலை வழங்கப்பட்டது. கல்வி உதவி தொகையாக மூன்று மாணவிகளுக்கு தலா 5 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டது.


அதேபோ நகரில் பிறவி மர்தீஸ்வரர் கோயில் எதிர்புறம் தினந்தோறும் பொது மக்களுக்கு சேவையாக மூலிகை கஞ்சி வழங்கி கொண்டிருக்கும் வெங்கடேஷ் மற்றும் அவரது குழுவை பாராட்டி ஒரு நாள் மூலிகை கஞ்சி வழங்குவதற்கான தொகை ரூபாய் 1500 வழங்கப்பட்டது.


அதேபோல் நமது நகரில் ஈம காரியங்களை பொறுப்புடன் செய்து கொண்டிருக்கும் அண்ணா நகர் மாணிக்கம் அவர்களை மேடையில்  கௌரவப்படுத்தி ஊக்கத்தொகை வழங்கப்பட்டது மேட்டுப்பாளையம் ஸ்ரீ ராஜகோபால் அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிக்கு பள்ளி மாணவ மாணவிகள் உணவு அருந்துவதற்காக 75 சில்வர் தட்டு மற்றும் டம்ளர் வழங்கப்பட்டது.


திருத்துறைப்பூண்டி வானகார தெருவில் சென்ற வாரம் முற்றிலும் தீயினால் சேதமடைந்த குடிசை வீட்டிற்கு ரூபாய் 10 ஆயிரம் நிவாரணம் வழங்கப்பட்டது திருத்துறைப்பூண்டி அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பள்ளி மாணவர்கள்  அமர்ந்து யோகா செய்யும் வகையில் பெரிய தார்ப்பாய் ஒன்று வழங்கப்பட்டது.


கீழக்களூர் நக்கீரனார் அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளி மாணவர்கள் ஐந்து நபர்களுக்கு சீருடை வழங்கப்பட்டது. திருத்துறைப்பூண்டி வி ஐ ஏ கேட்டரிங் கல்லூரி மாணவர்களுக்கு இரண்டு நபருக்கு  சீருடைகளும் வழங்கப்பட்டது.  நிகழ்வுகள் அனைத்தையும் திருத்துறைப்பூண்டி டெல்டா ரோட்டரி சங்க முன்னாள் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் அனைவரும் மிகுந்த ஒத்துழைப்போடு சிறப்பாக செய்திருந்தனர்.


இப்பணி ஏற்பு விழா நிகழ்வுக்கு வர்த்தக சங்க நிர்வாகிகள் மற்றும் லயன்ஸ் நூற்றாண்டு லைன்ஸ் இன்னர் வீல் திருவாரூர் மருதூர் வேதாரண்யம் ரோட்டரி சங்கங்களின் பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் ,நகர பொதுமக்கள் மற்றும் பயனாளிகள், பத்திரிக்கை நிருபர்கள் மற்றும் அரசியல் கட்சி பிரமுகர்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். நிறைவாக செயலாளர் அழகரசன் அனைவருக்கும் நன்றி கூறினார்


- திருவாரூர் மாவட்ட செய்தியாளர் தருண்சுரேஷ் 

No comments:

Post a Comment

Post Top Ad