மன்னார்குடி அருகே தென்பரை இலவச பயிற்சி மையத்தில் குரூப் 1 தேர்வுக்கான நுழைவு சீட்டு வழங்கல். - தமிழக குரல் - திருவாரூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Sunday 7 July 2024

மன்னார்குடி அருகே தென்பரை இலவச பயிற்சி மையத்தில் குரூப் 1 தேர்வுக்கான நுழைவு சீட்டு வழங்கல்.


திருவாரூர் மாவட்டம்  மன்னார்குடி அருகே தென்பரை இலவச பயிற்சி மையம் கடந்த 2016 முதல் கிராமப்புற இளைஞர்களுக்கு போட்டித்தேர்வு எழுதுவதற்கான இலவச பயிற்சி வகுப்பை நடத்தி  நூற்றுக்கு  மேற்பட்டோர் வெற்றி பெற்று   அரசு  பணியில் அமர்த்தி வருகிறது. 

இந்த மையத்தில்  திருவாரூர் மாவட்டம் மட்டுமின்றி அண்டை மாவட்டத்தை சேர்ந்த இளைஞர்களும் போட்டித்தேர்விற்கு தயார் செய்து வருகின்றனர்  இந்நிலையில் அரசு  தற்போது குரூப் 2 தேர்வு மற்றும் சென்னை உயர்நீதிமன்ற தேர்வுக்காக 100 பேர் பயிற்சி பெற்று வருகின்றனர். 


தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு - 1 முதல்நிலைத் தேர்வு வரும் 13 ஆம் தேதி சனிக்கிழமை முற்பகல் நடைபெற உள்ளது. தென்பரை இலவச பயிற்சி மையத்தில் பயின்ற 20 போட்டித் தேர்வர்கள் இந்த தேர்வை எழுத உள்ளனர்.


இவர்களுக்கான தேர்வுக்கூட நுழைவுச்சீட்டு வழங்கும் நிகழ்ச்சி மன்னார்குடி  அருகே தென்பரை கிராமத்தில்  தென்பரை பயிற்சி மையத்தில் நுழைவு சீட்டும் வழங்கும் விழா நடைபெற்றது. இந்நிகழ்வில் மன்னார்குடி மிட்டவுன் ரோட்டரி சங்க தலைவர் எ. பன்னீர்செல்வம் தலைமையில் நடைபெற்றது. 


இதில் பயிற்சி மைய இயக்குநர் சு. வைரமுத்து, மற்றும் பயிற்சியாளர் சீத்தாலெட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆலங்கோட்டை அரசு மேல்நிலைப்பள்ளி முதுகலை ஆசிரியர் க. மனோகரன், ஓய்வு தலைமையாசிரியர் சி. குருசாமி ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு போட்டித் தேர்வர்களுக்கு ஹால் டிக்கெட் வழங்கி சிறப்பித்தனர்.


இதில் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு நுழைவு சீட்டு வழங்கி இந்த மையத்தில் படித்த அனைவரும் வெற்றி பெற வேண்டும் என வாழ்த்தினார்கள்.


இந்நிகழ்ச்சியில் ரோட்டரி சமுதாயக் குழும தலைவர் உலகநாதன், ஆசிரியர் பயிற்றுநர் சக்திவேல், அரசு போக்குவரத்து கழக தொழிற்சங்க தலைவர் மதிவாணன் மற்றும் அரசு பள்ளி ஆசிரியர்கள், தன்னார்வலர்கள் அமைப்பினர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 


முன்னதாக தென்பரை பயிற்சி மைய நிறுவனர் நா. சுப்ரமணியன் அனைவரையும் வரவேற்றார். நிகழ்ச்சியின் நிறைவாக அய்யா நடராஜன் நன்றி கூறினார்.


- திருவாரூர் மாவட்ட செய்தியாளர் தருண்சுரேஷ். 

No comments:

Post a Comment

Post Top Ad