திருவாரூரில் கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராய உயிரிழப்புக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி இளைஞர் பெருமன்றம்- மாதர் சங்கம் அமைப்பினர் ஆர்ப்பாட்டம். - தமிழக குரல் - திருவாரூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Monday 24 June 2024

திருவாரூரில் கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராய உயிரிழப்புக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி இளைஞர் பெருமன்றம்- மாதர் சங்கம் அமைப்பினர் ஆர்ப்பாட்டம்.


போதையில்லா தமிழ்நாட்டை உருவாக்கிட கள்ளக்குறிச்சியில் விஷசாராயம் அருந்தி 57 பேர் உயிரிழந்தது நீதி வேண்டும், கள்ளச்சாராய வியாபாரிகள் விற்பனைக்கு உடந்தையாக இருந்த காவல்துறை மற்றும் வருவாய் துறை அதிகாரிகள்  மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும்



அதே போல் தமிழ்நாடு முழுவதும் போதைப்பொருட்கள் கள்ளச்சாராய விற்பனையில் ஈடுபடும் நபர்கள் மீது இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கிடவும், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ 50 லட்சம் நிவாரணம்  வழங்கிடு என்பன உள்ளிட்ட  பல்வேறு கோரிக்கையினை வலியுறுத்தி


அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம், இந்திய மாதர் தேசிய சம்மேளனம் ஆகிய அமைப்புகளின் 300- க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு திருவாரூர் பழைய பேருந்து அருகில் கண்டன முழக்கம் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


இந்த ஆர்ப்பார்பட்டத்தில் இளைஞர் மன்ற மாவட்ட செயலாளர் துரை அருள்ராஜன், மாதர் சங்க மாவட்ட செயலாளர் கே.சுஜாதா ஆகியோர் தலைமையிலும், மாவட்ட தலைவர்கள் சு.பாலசுப்பிரமணியன், ஆர்.சுலோச்சனா முன்னிலையிலும் நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டார்கள்.


இதில் அமைப்பின் இரு நிர்வாகிகள் ஆர்.உஷா, ஆர்.தமிழ்செல்வி, எம்.மணிமேகலை, எம்.நல்லசுகம், எஸ்.பாப்பையன், வி.பாக்யராஜ், வி.சி.கார்த்தி உட்பட பலர் கலந்துகொண்டு பேசினார்கள். காவல்துறை போராட்டம் நடத்த அனுமதிக்க மறுத்ததால் போலீசாருக்கும் போராட்டக்காரருக்கும் சிறிது நேரம் வாக்கு வாதம்  ஏற்பட்டது. அதனை தொடர்ந்து  இப்போராட்டம் நடைபெற்றது.


-செய்தியாளர் தருண்சுரேஷ்

No comments:

Post a Comment

Post Top Ad