கடிதத்தை முறையாக டெலிவரி செய்யாத கொரியர் நிறுவனம் - அபராதம் விதித்த நுகர்வோர் குறைதீர் ஆணையம் - அபராத தொகையை வட்டியுடன் நீதிபதியிடம் வழங்கிய கொரியர் நிறுவனம். - தமிழக குரல் - திருவாரூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Monday 24 June 2024

கடிதத்தை முறையாக டெலிவரி செய்யாத கொரியர் நிறுவனம் - அபராதம் விதித்த நுகர்வோர் குறைதீர் ஆணையம் - அபராத தொகையை வட்டியுடன் நீதிபதியிடம் வழங்கிய கொரியர் நிறுவனம்.


நாகப்பட்டினம் மாவட்டம் திருக்குவளை அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரியில் உதவி பேராசிரியையாக பணியாற்றுபவர்  ஜானகி ரம்யா. இவர் கடந்த 2020ம் ஆண்டு தனியார்  கூரியர் நிறுவனம் வாயிலாக அண்ணா பல்கலைக்கழகத்திற்கு அனுப்பிய கடிதம் முறையாக டெலிவரி செய்யப்படவில்லை.


இதனால் மன உளைச்சல் அடைந்த ஜானகி ரம்யா திருவாரூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கு விசாரணை முடிவில் புகார்தாரருக்கு இழப்பீடாக ரூ.50 ஆயிரம், வழக்கு செலவுத்தொகை ரூ.5 ஆயிரம் வழங்க திருவாரூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணைய தலைவர் சேகர் உத்தரவு பிறப்பித்தார்.
 

இதனை தொடர்ந்து நிறைவேற்று மனுவும்  அளிக்கப்பட்டு விசாரணை நடந்து வந்த நிலையில் இன்று திருவாரூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில், சம்மந்தப்பட்ட தனியார் கூரியர் நிறுவனம் அபராத தொகையை திருவாரூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணைய தலைவர் சேகர் மற்றும் நுகர்வோர் குறைதீர் ஆணைய உறுப்பினர் லட்சுமணன் ஆகியோரிடம் வழங்கியது.
 

இதனை தொடர்ந்து வட்டியுடன் கணக்கிடப்பட்ட தொகையான ரூ. 59 ஆயிரத்து 192 க்கான காசோலையை நுகர்வோர்  குறைதீர் ஆணைய தலைவர் சேகர் மற்றும் உறுப்பினர் லட்சுமணன் ஆகியோர் பாதிக்கப்பட்ட  அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரி உதவி பேராசிரியர்  ஜானகி ரம்யா வின் வழக்கறிஞரிடம் வழங்கினர்.


-செய்தியாளர் தருண்சுரேஷ்

No comments:

Post a Comment

Post Top Ad