மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்ட 398 மனுக்கள் மீது மாவட்ட ஆட்சியர் நேரில் விசாரணை குறித்த நேரத்தில் நடவடிக்கை எடுக்ககோரி மாவட்ட ஆட்சியர் சம்பந்தப்பட்ட துறையினருக்கு உத்தரவு. - தமிழக குரல் - திருவாரூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Monday 24 June 2024

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்ட 398 மனுக்கள் மீது மாவட்ட ஆட்சியர் நேரில் விசாரணை குறித்த நேரத்தில் நடவடிக்கை எடுக்ககோரி மாவட்ட ஆட்சியர் சம்பந்தப்பட்ட துறையினருக்கு உத்தரவு.


திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டம்  வாரத்தின் முதல் நாள் திங்கட்கிழமை மாவட்ட ஆட்சியர்  தி.சாருஸ்ரீ  தலைமையில் நடைபெறுகிறது.


இக்கூட்டத்தில்  பொதுமக்கள் திருவாரூர்மாவட்டத்தில்  அந்தந்த வட்டங்களை உள்ள  அரசு அலுவலகங்களில் நிறைவேற்றப்படாத  பிரச்சனைகளை திருவாரூர் மாவட்டஆட்சியரிடம் நேரில்  மனு அளித்து செய்துதர கேட்டுக் கொள்கின்றனர்.


இதில் பட்டாமாறுதல், நிலஅளவை உள்ளிட்ட பிரச்சனைகளை சரி செய்யகோரியும்,  இலவச வீட்டு மனை பட்டா, முதியோர் உதவித்தொகை, ஆதரவற்றோர் மாற்றுத்திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பு, கல்விக்கடன், புதிய குடும்ப அட்டை, ஆக்கிரமிப்பு உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்களின்  கோரிக்கைகள் குறித்த 398 மனுக்களை  பொதுமக்கள்  மாவட்டஆட்சியரிடம் நேரில் அளித்தனர், பொதுமக்களிடம் மனுக்களை விசாரித்த மாவட்ட ஆட்சியர் அரசு அலுவலகங்களில் செய்துதரக்கூடிய  மனுக்களை சம்மந்தப்பட்டதுறை அலுவலர்களிடம்  வழங்கி  குறித்த காலத்திற்குள் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டார்.


கூட்டத்தில் தொடர்ந்து  ஆறு நபர்களுக்கு புதிய பணி நியமன ஆணையை மாவட்டஆட்சியர் வழங்கினார், இதில் வன்கொடுமையினால் இறந்த நன்னிலம் கடுவங்குடி கிராமத்தினை சேர்ந்த சாமிநாதன் என்பவரின் மகள்  சந்தியா என்பவருக்கு  ஆதிதிராவிடர் நலத்துறையின் சார்பில் பணி நியமன ஆணையும், தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் மூலம் நேரடி நியமனத்தில் பணிப்பார்வையாளர் பதவிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள  2 நபர்களுக்கும்,  உதவியாளர் பணியிடத்திற்கு தேர்வு செய்யப்பட்டுள்ள 3  நபர்கள்  என 6 பேருக்கு புதிய பணிநியமன ஆணையினை மாவட்ட ஆட்சியர்  சாருஸ்ரீ   வழங்கினார்.


இக்கூட்டத்தில்  கூடுதல்ஆட்சியர் பிரியங்கா , மாவட்டவருவாய் அலுவலர் சண்முகநாதன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்கள்  ராஜா, சேகர் ,  மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அலுவலர் பாலசந்தர்  உட்பட அனைத்துதுறை அரசு  அலுவலர்கள் கலந்துகொண்டனர்.


-செய்தியாளர் தருண்சுரேஷ்

No comments:

Post a Comment

Post Top Ad