நன்னிலம் அருகே குடவாசல் செல்லும் பேருந்தை மீண்டும் இயக்கு கோரி பிலவாடி கடைவீதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் சாலை மறியல். - தமிழக குரல் - திருவாரூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Wednesday 26 June 2024

நன்னிலம் அருகே குடவாசல் செல்லும் பேருந்தை மீண்டும் இயக்கு கோரி பிலவாடி கடைவீதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் சாலை மறியல்.


மயிலாடுதுறையில் இருந்து பூந்தோட்டம், எரவாஞ்சேரி வழியாக குடவாசல் செல்லும் பேருந்தை மீண்டும் இயக்க வலியுறுத்தி பிலவாடி கடைவீதியில் குடவாசல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் சாலை மறியல்  போராட்டத்தில் இறங்கி ஈடுப்பட்டனர். 

கடந்த காலங்களில் மயிலாடுதுறையில் இருந்து பூந்தோட்டம், எரவாஞ்சேரி, பிலாவடி வழியாக குடவாக்கம் வரை அரசு பஸ் பேருந்து இயக்கப்பட்டது. இந்த பஸ் கடந்த ஓராண்டாக மேற்கொண்ட வழித்தடத்தில் நிறுத்தப்பட்டது. இதனால் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்கள், அரசு பணிக்கு செல்லும் அலுவலர்கள் உட்பட பொதுமக்கள் அனைவரும் அரசு பேருந்தை நம்பி உள்ளனர் இதனால் பஸ் வசதி இன்றி மிகவும் சிரமப்படுகின்றனர். 


உடனடியாக ஏற்கனவே இயக்கிய பேருந்து தடம் எண்: 457  மீண்டும் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்களின் நலன் கருதி கருத்தில் கொண்டு காலை-மாலை நேரத்தில் இயக்க வேண்டும் என வலியுறுத்தி கும்பகோணம்- நன்னிலம் சாலையில் உள்ள பிலவாடி கடைவீதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


இப்போராட்டத்திற்கு மாநில குழு உறுப்பினர் நாகராஜன் தலைமை வகித்தார். குடவாசல் தெற்கு ஒன்றிய செயலாளர் கோபிநாத், நகர செயலாளர் சேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். போராட்டத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் வீரபாண்டியன், மாவட்ட குழு உறுப்பினர்கள் கெரக்கோரியா, லட்சுமி மற்றும் ஒன்றிய, நகர குழு உறுப்பினர்கள், கிளை செயலாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். 


சம்பவ இடத்திற்கு வந்த நன்னிலம் உதவிக் காவல் கண்காணிப்பாளர், போக்குவரத்து அதிகாரிகளை தொடர்பு கொண்டு பேசியதில் மக்களின் நியாயமான கோரிக்கையை 10 நாளில் நிறைவேற்றுவதாக உறுதி அளித்துள்ளனர். 


இதையடுத்து போராட்டத்தை கைவிடுமாறு சிபிஎம் மாநில குழு உறுப்பினர் நாகராஜன் மற்றும் பொதுமக்கள் மத்தியில் நடைபெற்ற சமாதான பேச்சு வார்த்தை நடைபெற்றது. பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டு போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டது. மேலும் சாலை மறியலில் ஈடுபட்டதால் போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் குடவாசல் காவல் துறையினர் கைது செய்தனர்.


-திருவாரூர் மாவட்ட செய்தியாளர் தருண்சுரேஷ் 

No comments:

Post a Comment

Post Top Ad