திருவாரூர் அருகே கூட்டுறவு சங்கத்தில் 53 லட்சத்து 34 ஆயிரம் பணம் கையாடல் செய்த வழக்கில் கூட்டுறவு சங்க செயலாளர் மற்றும் ஊழியர் கைது மேலும் அதிமுகவை சேர்ந்த முன்னாள் சங்க தலைவர் உள்ளிட்ட 9 பேரை போலீசார் தேடி வருகின்றனர். - தமிழக குரல் - திருவாரூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Wednesday 26 June 2024

திருவாரூர் அருகே கூட்டுறவு சங்கத்தில் 53 லட்சத்து 34 ஆயிரம் பணம் கையாடல் செய்த வழக்கில் கூட்டுறவு சங்க செயலாளர் மற்றும் ஊழியர் கைது மேலும் அதிமுகவை சேர்ந்த முன்னாள் சங்க தலைவர் உள்ளிட்ட 9 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.


திருவாரூர் அருகே தப்பளாம்புலியூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி செயல்பட்டு வருகிறது. இந்த கூட்டுறவு  சங்கத்தில் கடந்த 2022 ஆண்டு விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு வழங்கியதில் 53 லட்சத்து 34 ஆயிரம் ரூபாய் முறைகேடு நடந்திருப்பதாக கூட்டுறவு துறை விசாரணையில் தெரியவந்தது.

இதனைதொடர்ந்து கூட்டுறவுத்துறை சரக துணைப்பதிவாளர் சார்பில் திருவாரூர் பொருளாதார குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் கடந்த 2022 ஆம் ஆண்டு புகார் மனு அளிக்கப்பட்டது .


இது குறித்து விசாரணை நடைபெற்று வந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அதிமுகவை சேர்ந்த கூட்டுறவு சங்க தலைவர் ரவி நீக்கப்பட்டார், தற்போது இந்த வழக்கில் கூட்டுறவு சங்க முன்னாள் செயலாளர் அசோகன், தற்போதைய கூட்டுறவு சங்க செயலாளர் பொறுப்பு ராஜசேகர் ,கூட்டுறவு சங்க ஊழியர் காளிதாஸ் மற்றும் அதிமுக கூட்டுறவு சங்க தலைவராக இருந்த ரவி மற்றும் கூட்டுறவு சங்க உறுப்பினர்கள் உள்ளிட்ட 11 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.


இதனைத் தொடர்ந்து தற்போது கூட்டுறவு சங்க பொறுப்பு செயலாளர் ராஜசேகர் மற்றும் கூட்டுறவு சங்க ஊழியர் காளிதாஸ் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் தலைமைறைவாக உள்ள அதிமுக முன்னாள் சங்க தலைவர் ரவி உள்ளிட்ட 9  பேரை போலீசார் தேடி வருகின்றனர். கூட்டுறவு சங்க மோசடி புகாரில் கூட்டுறவு சங்க செயலாளர் மற்றும் ஊழியர் கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


-திருவாரூர் மாவட்ட செய்தியாளர் தருண்சுரேஷ் 

No comments:

Post a Comment

Post Top Ad