குன்னியூரில் மறைந்த திமுக தலைவர் கலைஞரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு முத்தமிழ் அறிஞர் கலைஞரின் திருவுருவச்சிலை திறப்பு விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. - தமிழக குரல் - திருவாரூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Monday 24 June 2024

குன்னியூரில் மறைந்த திமுக தலைவர் கலைஞரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு முத்தமிழ் அறிஞர் கலைஞரின் திருவுருவச்சிலை திறப்பு விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.


திருவாரூர் மாவட்டம் மாவூர் அருகே குன்னியூர் கிராமத்தில் வசித்து வருபவர் திமுக நிர்வாகி சுரேஷ்குமார். இவரது குடும்பத்தினர் கடந்த ஐம்பது ஆண்டுகளில் மேலாக திமுக பற்றாளர்களாக இருந்து வருகின்றனர். மேலும் முத்தமிழறிஞர் கலைஞரிடம் நெருங்கிய நட்புணர்வு கொண்டதின் காரணமாக தங்கள் இல்லத்தின் முன்பு கலைஞர் திருஉருவ சிலை அமைக்க திட்டமிட்டனர்.



இதனை தொடர்ந்து அனுபவமிக்க சிறந்த சிற்பியை கொண்டு வெண்கலத்திலான சிற்பத்தை செய்து தங்கள் வீட்டின் முன்பு அமைத்தனர். இந்த நிலையில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு கட்டப்பட்ட, மறைந்த திமுக தலைவர் கலைஞர் கருணாநிதி திருவுருவ சிலை திறப்பு நிகழ்ச்சி திருவாரூர் திமுக ஒன்றிய செயலாளரும், திருவாரூர் ஒன்றிய பெருந்தலைவருமான புலிவலம் தேவா தலைமையில் நடைபெற்றது.


இதில் திமுக மூத்த நிர்வாகி காந்தி முத்தமிழ் அறிஞர் கலைஞரின் திருவுருவச்சிலையை திறந்து வைத்தார்.
தொடர்ந்து ஒன்றிய செயலாளர் தேவா கலைஞர் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.


இதன் தொடர்ச்சியாக கழக கொடி ஏற்றியும், பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது .பின்னர் ஏழை எளியவர்களுக்கு வேட்டி, சேலைகளை ஒன்றிய பெருந்தலைவர் தேவா  வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் அவைத்தலைவர் செல்வராஜ், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் கருணாகரன் மற்றும் திமுக நிர்வாகிகள் ஏராளமானோர் பங்கேற்றனர்.


-செய்தியாளர் தருண்சுரேஷ்

No comments:

Post a Comment

Post Top Ad