மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள், முதியோர்கள், கர்ப்பிணி தாய்மார்கள், கைக்குழந்தைகள் உள்ளிட்டோரின் வாகனங்களை அனுமதிக்காமல் அவர்கள் கடும் வெயிலில் நடந்து சென்று மருத்துவமணைக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது. தெற்கு வீதியின் ஒரு எல்லையான நகராட்சி அருகே போடப்பட்டுள்ள பந்தலில் பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெற உள்ள நிலையில் அரை கிலோமீட்டர் அப்பால் உள்ள தெற்கு வீதியில் மறுமுனையில் சாலை தடுப்புகளை அமைத்து மருத்துவமனைக்கு வரும் பொது மக்களை தடுத்து நிறுத்தி மெட்டல் டிடெக்டர் சோதனை கருவிகள் மூலம் சோதனை செய்து உள்ளே அனுப்புகின்றனர்.
குறிப்பாக உடல்நிலை சரியில்லாத நிலையில் மருத்துவமனைக்கு செல்லும் நோயாளிகள் மற்றும் அவரது உறவினர்களிடம் மெட்டல் டிடெக்டர் கருவிக்கொண்டு சோதனை செய்து அவர்கள் கொண்டு வரும் பை உள்ளே என்ன இருக்கிறது என ஒவ்வொன்றாக ஆராய்ந்து அதன் பிறகு உள்ளே அனுப்புகின்றனர்.
இதனால் கடும் வெயிலில் பொதுமக்கள் நோயாளிகள் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். இதனால் வங்கிகளுக்கு செல்லும் பொதுமக்கள் மருத்துவமனைக்கு செல்லும் நோயாளிகள் உள்ளிட்ட பலரும் பெரிதும் சிரமப்பட்டு வருகின்றனர். இது குறித்து காவல்துறை தரப்பினர் கேட்டபோது எங்கள் மேல் அதிகாரிகள் கூறியபடி தான் நாங்கள் செய்ய முடியும் என்றனர்.
யாரோ ஒருவர் பிரச்சாரத்திற்கு வருவதற்கு நாங்கள் ஏன் அவதிப்பட வேண்டும் எங்களை ஏன் சிரமப்படுத்துகிறீர்கள் என பொதுமக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
-செய்தியாளர் தருண்சுரேஷ்
No comments:
Post a Comment