திருவாரூர் பழைய பேருந்து நிலையம் பகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் நாகை நாடாளுமன்ற தொகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போட்டியிடும் செல்வராஜை ஆதரித்து மே 17 இயக்கத் தலைவர் திருமுருகன் காந்தி பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
அப்போது அவர் பேசியதாவது, மோடி அரசுக்கு முடிவு கட்டுகிறோம் பாஜக அரசுக்கு பாடை கட்டுகிறோம். ஒரு வடநாட்டு கட்சி எங்க ஊருக்கு வந்து இந்தி எதிர்ப்பு போராட்டத்தை பற்றி அவதூறாக கூறுவது கண்டிக்கத்தக்கது. நாங்கள் அறிவாளிக்கு அறிவாளியாக பதில் சொல்லுவோம், கருத்தாக பேசினால் கருத்தாக பதில் சொல்வோம், கட்டையால் பேசினால் கட்டையால் பதில் சொல்வோம்.
என்ன நினைத்துக் கொண்டிருக்கிறாய் எங்களைப் பற்றி.? நாங்கள் பார்த்துக் கொண்டு சும்மா இருக்க மாட்டோம். இன்று கோயம்புத்தூரில் ஓட்டு கேட்க சென்ற இடத்தில் தொழுகை நடத்திக் கொண்டிருந்த இஸ்லாமியர்களிடம் அடிதடியில் பாஜகவினர் ஈடுபட்டுள்ளனர். பாஜகவினர் ஓட்டு கேட்க செல்கிறார்களா..? கலவரம் பண்ண செல்கிறார்களா..? என்று கேள்வி எழுப்பினார்.
No comments:
Post a Comment