பாய்லர் சுத்தம் செய்த போது ஆசிட் வெடித்து சிதறியதால் இருவர் படுகாயம். - தமிழக குரல் - திருவாரூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Thursday, 4 April 2024

பாய்லர் சுத்தம் செய்த போது ஆசிட் வெடித்து சிதறியதால் இருவர் படுகாயம்.


திருவாரூர் அருகே அரிசி ஆலையில் உள்ள பாய்லர் சித்தரிப்பு பணியில் ஈடுபட்டபோது ஆசிட் வெடித்து சிதறியதால் இருவர் படுகாயம் உயிருக்கு ஆபத்தான நிலையில் திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதி இது குறித்து போலீசார் விசாரணை. திருவாரூர் அருகே அலிவலம் கிராமத்தில் உதயகுமார் என்பவருக்கு சொந்தமான அரிசி ஆலை செயல்பட்டு வருகிறது இதில் ஆறு மாதத்திற்கு ஒருமுறை பராமரிப்பு பணிக்காக ஆலை ஓட்டம் நிறுத்தப்பட்ட நிலையில் இன்று பாய்லர் சுத்திகரிக்கும் பணியில் பின்னவாசல் பகுதியை சேர்ந்த நாகூரான் ( 55) பவுத்திரம் மாணிக்கம் பகுதியை சேர்ந்த ஜேம்ஸ் (62) இருவரும் ஆசிட் ஊற்றி சுத்திகரிக்கும் பணியில் ஈடுபட்டு வந்துள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக ஆசிக் வெடித்து சிதறியதில் இருவரும் படுகாயம் அடைந்தனர். 

இதனைத் தொடர்ந்து திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஊழியர்கள் இருவரும் உரிய பாதுகாப்பு உபகரணங்கள் இன்றி சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது. 


-செய்தியாளர் தருண்சுரேஷ் 

No comments:

Post a Comment

Post Top Ad