திருவாரூர் மாவட்டம் நன்னிலம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மற்றும் நன்னிலம் ஒன்றியத்தில் அதிமுக பூத் கமிட்டிகளை முன்னாள் அமைச்சர் இரா.காமராஜ் ஆய்வு. - தமிழக குரல் - திருவாரூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Wednesday, 10 April 2024

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மற்றும் நன்னிலம் ஒன்றியத்தில் அதிமுக பூத் கமிட்டிகளை முன்னாள் அமைச்சர் இரா.காமராஜ் ஆய்வு.


நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளதை முன்னிட்டு அரசியல் கட்சிகள் தேர்தல் பிரச்சாரம், வாக்கு சேகரிப்பு மற்றும் பூத் கமிட்டி ஆய்வுக் கூட்டங்கள் என நடத்தி வருகின்றன. அந்த வகையில் அதிமுக சார்பில் குடவாசல் வடக்கு மற்றும் நன்னிலம் வடக்கு ஒன்றியங்களில் பூத் கமிட்டி ஆய்வு கூட்டங்கள் நடைபெற்றது. 

ஆய்வுக் கூட்டங்களை மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் அமைச்சர் நன்னிலம் சட்டமன்ற உறுப்பினர் இரா.காமராஜ்  ஆய்வு செய்தார். அதிமுக அரசின் பத்தாண்டு கால சாதனைகளை மக்களிடம் எடுத்து சொல்லி ஆதரவை திரட்டும் பணியில் பூத் கமிட்டி நிர்வாகிகள் ஈடுபட வேண்டும் என முன்னாள் அமைச்சர் நன்னிலம் சட்டமன்ற உறுப்பினர் இரா.காமராஜ்  கேட்டுக் கொண்டார். 


மேலும் ஒவ்வொரு பூத் கமிட்டிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள மக்களை தொடர்ந்து சந்தித்து பேசி அதிமுக கூட்டணி கழக வேட்பாளர் டாக்டர் சுர்ஜித் சங்கர்க்கு ஆதரவாக வாக்களிக்க செய்திட வேண்டும்  என கேட்டுக்கொண்டார்.


குடவாசல் ஒன்றியத்தில் மருதுவாஞ்சேரி கடகக்குடி திருவிழிமழலை மருத்துவகுடி உள்ளிட்ட இடங்களிலும் அதேபோல நன்னிலம் வடக்கு ஒன்றியத்தில் செருவளூர் மேனாங்குடி, கொல்லாபுரம், வேலங்குடி, கொல்லுமாங்குடி  உள்ளிட்ட இடங்களிலும் பூத் கமிட்டிகளை முன்னாள் அமைச்சர் நன்னிலம் சட்டமன்ற உறுப்பினர் ஆர்.காமராஜ்  ஆய்வு செய்தார் நிகழ்வின் போது கட்சியின் ஒன்றியச் செயலாளர்கள் உள்ளிட்ட அக்கட்சி நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.


- செய்தியாளர் தருண்சுரேஷ் 

No comments:

Post a Comment

Post Top Ad