அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறியது தமிழ்நாடு மக்கள் கட்சி - மாநில பொதுச் செயலாளர் சிவராமன் திருவாரூரில் பேட்டி. - தமிழக குரல் - திருவாரூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Thursday 11 April 2024

அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறியது தமிழ்நாடு மக்கள் கட்சி - மாநில பொதுச் செயலாளர் சிவராமன் திருவாரூரில் பேட்டி.


தமிழகத்தில் 18 வது நாடாளுமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 19ம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் காங்கிரஸ், திமுக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் இணைந்து இந்தியா கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. அதேபோல பாஜக, பாமக உள்ளிட்ட கட்சிகள் தேசிய ஜனநாயக கூட்டணியில் போட்டியிடுகின்றன. 

எடப்பாடி தலைமையிலான அதிமுக கூட்டணியில் தேமுதிக, தமிழ்நாடு மக்கள் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் சேர்ந்து போட்டியிடுகின்றன. இதேபோல நாம் தமிழர் கட்சி தனியாக போட்டியிடுகிறது. 


இதன் காரணமாக தமிழ்நாட்டில் நான்கு முனை போட்டி நிலவுகிறது. இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக கூட்டணியில் அங்கம் வகித்து வந்த தமிழ்நாடு மக்கள் கட்சி அந்த கூட்டணியில் இருந்து விலகி உள்ளது. 


இது குறித்து திருவாரூரில் தமிழ்நாடு மக்கள் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் சிவராமன் தெரிவிக்கும் போது... ஆரம்பத்தில் பாஜகவை எதிர்ப்பது போல நடிக்கும் அதிமுக தலைமையிலான கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்தோம்.


உண்மையில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக, பாஜகவை எதிர்த்துப் போட்டியிடும் என்று நினைத்து நாங்கள் அவருடன் கூட்டணி வைத்தோம். ஆனால் அதன் பிறகு அதிமுகவின் போக்கு முழுக்க முழுக்க திமுகவை எதிர்ப்பதாக மட்டுமே இருந்தது. பாஜகவை எதிர்த்து ஒரு குரல் கூட எழுப்பவில்லை. 


இது குறித்து எங்கள் கட்சி சார்பில் கேட்டபோது எங்களை உதாசீனப்படுத்தும் வகையில் நடந்து கொண்டனர். மேலும்  பாஜகவின்  மறைமுக நண்பனாக அதிமுக  செயல்பட்டு வருகிறது. 


குறிப்பாக பிஜேபியின் பி டீமாக செயல்படும் அதிமுகவின் உண்மை முகம் வெளிவந்ததால் அதிமுக கூட்டணியிலிருந்து தமிழ்நாடு மக்கள் கட்சி வெளியேறுகிறது. தமிழ்நாட்டு மக்கள் எடப்பாடி பழனிசாமியின் உண்மை முகத்தை புரிந்து கொள்ள வேண்டும். 


பாஜகவை இந்த தேர்தலில் தோற்கடிப்பதற்கு மிகத் தீவிரமாக நாங்கள் செயலாற்றுவோம் என உறுதி கூறினார். தமிழ்நாட்டு மக்கள் அஇஅதிமுகவை புறக்கணிக்க வேண்டும், பாஜகவை புறக்கணிக்க வேண்டும் என்றார். 


இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு மக்கள் கட்சியின் மாநில தலைவர் அம்பிகாபதி, பொதுக்குழு உறுப்பினர்கள் ஸ்ரீதரன், ராணி, கார்த்திகேயன் மாவட்ட செயலாளர்கள் உதயகுமார், பாஸ்கரன், சீனிவாசன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். 


-செய்தியாளர் தருண்சுரேஷ்

No comments:

Post a Comment

Post Top Ad