பாரதிய ஜனதா கட்சி மக்களுக்கான ஏதாவது ஒரு நல்ல திட்டங்களை கொண்டு வந்துள்ளார்களா என்பதை சொல்லி ஓட்டு கேட்க முடியாதவர்கள் தற்போது ரோடு ஷோ, என கை ஆட்டிக்கொண்டு வருகிறார்கள் ஏப்ரல் 19ஆம் தேதி நாமும் பாஜகவிற்கு டாடா காண்பிக்க வேண்டும் என மன்னார்குடியில் சீமான் பேச்சு - தமிழக குரல் - திருவாரூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Saturday, 13 April 2024

பாரதிய ஜனதா கட்சி மக்களுக்கான ஏதாவது ஒரு நல்ல திட்டங்களை கொண்டு வந்துள்ளார்களா என்பதை சொல்லி ஓட்டு கேட்க முடியாதவர்கள் தற்போது ரோடு ஷோ, என கை ஆட்டிக்கொண்டு வருகிறார்கள் ஏப்ரல் 19ஆம் தேதி நாமும் பாஜகவிற்கு டாடா காண்பிக்க வேண்டும் என மன்னார்குடியில் சீமான் பேச்சு


தஞ்சாவூர் பாராளுமன்ற தொகுதியில்  போட்டியிடும்  நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் ஹுமாயூன் கபீர் க்கு  ஒலி வாங்கி சின்னத்திற்கு வாக்கு சேகரித்து நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் திருவாரூர் மாவட்டம்  மன்னார்குடியில் பெரியார் சிலை முன்பு தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். 
  

அப்போது 20 ஆண்டுகளுக்கு மேலாக காங்கிரஸ், பாரதிய ஜனதா கட்சி  ஆண்டு வருகிறது தமிழகத்தில் அதிமுக, திமுக பல ஆண்டுகளாக ஆட்சி செய்து வருகிறது  மாநிலத்தின் அனைத்து உரிமைகளையும் பறிகொடுத்தது அதிமுகவும்  திமுகவும்  தான். அதனை  பரித்துக் கொண்டு  போனவர்கள் பாஜகவும் , காங்கிரஸ் கட்சியும்  தான்  நீட் தேர்வை முதன் முதலில் கொண்டு வந்தது காங்கிரஸ் கட்சி தான் அதனை ஆதரித்தது அப்போது  திமுக சரக்கு மற்றும் சேவை  வரியை கொண்டு வந்தது  காங்கிரஸ் அவர்கள் பெற்று பெயர்  வைத்தார்கள். 


அதற்கு  ஃபோன் விட்டா,  பூஸ்ட்  கொடுத்து அதை வளா்த்தவர் பாரத பிரதமர் நரேந்திர மோடி.  மத்தியில் 10 ஆண்டுகளாக ஆட்சி செய்த பாரதிய ஜனதா கட்சி மக்களுக்கான ஏதாவது ஒரு நல்ல திட்டங்களை கொண்டு வந்துள்ளார்களா  என்பதை சொல்லி ஓட்டு கேட்க முடியாதவர்கள். தற்போது ரோடு ஷோ, ரோடு ஷோ  என கை ஆட்டிக்கொண்டு வருகிறார்கள். ஏப்ரல் 19ஆம் தேதி நாமும் பாஜகவிற்கு டாடா காண்பிக்க  வேண்டும் இந்தியாவில் வெறும் செய்தி அரசியல் தான் இருந்து வருகிறது மோடி  கிளீன் இந்தியா என்று சொன்னார்கள். 


தற்பொழுது   நாடு சுத்தமாகிவிட்டதா  திமுக மூன்று ஆண்டு கால ஆட்சியில் ஆயிரம் ரூபாய் தவிர வேற ஏதாவது சொல்ல முடிகிறதா  தமிழக முதல்வர் வங்கியில்   ஆயிரம் ரூபாய்   வந்து விட்டதா , ஆயிரம் ரூபாய் வந்துவிட்டதா என ஆயிரம் தடவை கேட்டு வருகிறார். மூன்று ஆண்டுகளில் எந்த ஒரு நல்ல திட்டத்தையும்  தமிழக அரசு  கொண்டு வரவில்லை நரேந்திர மோடி தேர்தல் வரும்போது கச்சத்தீவை மீட்டு வருவேன் என்று சொல்லி வருவது வேதனையாக இருக்கிறது.  1976 ல் கொடுத்த கட்சத்தீவை எப்ப வந்து சொல்கிறார்.  


தேர்தல் வர  உள்ள நிலையில்  பாஜக மக்களிடம்  வாக்கு வாங்குவதற்காக   ஒரு ஏமாற்று வேலை செய்து வருகிறார் .  நரேந்திர மோடி தமிழில் பேசுவது தமிழர்கள் மீது பற்று இருப்பது போல் பேசுவது மிகவும் வேடிக்கையாக இருக்கிறது  தமிழை கொஞ்சம் கொஞ்சமாக அழித்து வருகிறார்கள்  பாஜகவினர் என பேசினார்.  அதனை தொடர்ந்து பாட்டு பாடி ஒளி வாங்கி சின்னத்திற்கு வாக்கு சேகரித்துக்கொண்டே  சென்றார்.

  

- செய்தியாளர் ஆர். தமிழரசன் 

No comments:

Post a Comment

Post Top Ad