இதனைத்தொடர்ந்து பங்குனி உத்திரப்பெருவிழாவின் முக்கிய விழாவான உலகப்புகழ்பெற்ற ஆலிதேரில் அருள்மிகு ஸ்ரீதியாகராஜ சுவாமி எழுந்தருளி வலம்வரும் ஆழித்தேரோட்ட திருவிழா காலை 8.50 மணிக்கு தொடங்கி நடைபெற்றது, தேர்திருவிழாவில் திருவாடுதுறை ஆதீனம் , வேளாக்குறிச்சி ஆதீனம், திருவாரூர் மாவட்டஆட்சியர் சாருஸ்ரீ , சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன் மாவட்டகாவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் அறநிலைத்துறையினர் உட்பட கலந்துகொண்டு ஆழிதேரை வடம்பிடித்து இழுத்து துவக்கிவைத்தனர்,
திருவாரூர் ஆழிதேரோட்ட திருவிழாவிற்கு வெளிமாநிலங்கள் , தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து ஆரூரா தியாகசா என பக்திகோஷம் எழுப்பி வடம்பிடித்து இழுத்து தேர் திருவிழாவில் கலந்துகொண்டனர், தேவவாத்தியங்கள் முழங்க ஆழிதேர் அசைந்தாடி நான்கு வீதிகளிலும் வலம்வருவதை ஏராளமான பொதுமக்கள் அனைத்து பகுதிகளிலும்கூடி கண்டு தரிசித்தனர்,
திருவாரூர் ஸ்ரீதியாகராஜ சுவாமி ஆழிதேர் 96 அடி உயரமும், 31 அடி அகலமும், 300 டன் எடையும் கொண்ட எண்கோண வடிவத்தில் ஆனது, முற்றிலுமாக அலங்கரிக்கப்பட்ட தேரின் எடை 400 டன் ஆகும் ,மகாராஜாவாக திகழும் திருவாரூர் ஸ்ரீ தியாகராஜ ஸ்வாமி ஆழிதேரோட்டத்தில் கலந்துகொண்டு வடம் பிடித்து இழுப்பது சகல பாக்கியங்களும் கிடைக்கப்பெற்று கைலாயத்தில் இடம்பெறுவர் என்பது ஐதீகம்.
ஆழிதேர் திருவிழாவில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் தலைமையில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காவல்துறையினர் , தீயணைப்புத் துறையினர் , ஊர்காவல்படையினர் என பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர், மேலும் கோவில் நிர்வாகத்தினர், நகராட்சி துறையினர், சுகாதாரத்துறையினர், பொதுப்பணித்துறையினர், நெடுஞ்சாலைதுறையினர் திருவாரூர் வர்த்தக சங்கத்தினர், சமூக ஆர்வலர்கள் என தேரோட்ட திருவிழாவில் பணியாற்றினர் , மேலும் தேர் திருவிழாவில் கலந்து கொள்ளும் பொதுமக்கள் பக்தர்களுக்கு உணவுகள், தண்ணீர் என தொண்டு நிறுவனங்கள், சமூகஆர்வலர்கள், வழங்கினர்.
-செய்தியாளர் தருண்சுரேஷ்
No comments:
Post a Comment