திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் மகா மாரியம்மன் கோயில் அருகே கும்பகோணம்- மன்னார்குடி சாலையில் தேர்தல் பறக்கும் படை குழுவினர், பறக்கும் படை அலுவலர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அவ்வழியே வந்த வாகனத்தினை தடுத்து பரிசோதனை செய்ததில் பித்தளை குத்துவிளக்குகள் 58, பித்தளை மரக்கால் ஆறு, பித்தளை படி எட்டு, பித்தளை துவக்கால் ஆறு, பித்தளை குடம் ஆறு மற்றும் எவர்சில்வர் குடம் 24 என சுமார் ரூபாய் 3 லட்சம் மதிப்புடைய 108 பொருட்கள் இருப்பது தெரியவந்தது.
இது தொடர்பாக உரிய ஆவணங்களை வழங்காததால் பறக்கும் படை அலுவலர்கள் இப் பொருட்களை பறிமுதல் செய்து வலங்கைமான் வட்டாட்சியர் ரஷ்யா பேகம் மற்றும் தேர்தல் துணை வட்டாட்சியர் ரவி ஆகியோரிடம் ஒப்படைத்தனர். உரிய ஆவணங்களை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் சமர்ப்பித்துபொருட்ளை பெற்றுக்கொள்ளலாம் என வட்டாட்சியர் கூறினார்.
-செய்தியாளர் தருண்சுரேஷ்
No comments:
Post a Comment