வலங்கைமான் அருகே ஆவூர் கடைவீதியில் நூறு சதவீதம் வாக்குப்பதிவு வலியுறுத்தி, நாட்டுப்புற கலைஞர்களால் விழிப்புணர்வு பாடல்கள் மூலம் வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி - தமிழக குரல் - திருவாரூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Thursday, 21 March 2024

வலங்கைமான் அருகே ஆவூர் கடைவீதியில் நூறு சதவீதம் வாக்குப்பதிவு வலியுறுத்தி, நாட்டுப்புற கலைஞர்களால் விழிப்புணர்வு பாடல்கள் மூலம் வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி


இந்தியாவின் 18 ஆவது நாடாளுமன்ற தேர்தல் ஏழு கட்டமாக நடக்கும் என தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது. முதல் கட்டமாக தமிழகத்துக்கு ஏப்ரல் 19 இல் ஓட்டுப் பதிவு நடக்கிறது.  கடந்த20-ம் தேதி முதல்  வேட்புமனு தாக்கல் துவங்கியது. நாடாளுமன்ற தேர்தல்  தேதி அறிவிக்கப்பட்ட நிலையில், 100%  வாக்குப்பதிவு உறுதிப்படுத்தும் விதமாக பல்வேறு முன்னெடுப்பு பணிகளை தேர்தல் ஆணையம் செயல்படுத்தி வருகிறது.

இந்நிலையில் திருவாரூர் மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ  உத்தரவின் பேரில், வாக்காளர் விழிப்புணர்வு பேரணி, வாக்காளர் கையெழுத்து இயக்கம் உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு  வருகிறது. அதன் ஒரு கட்டமாக நாகப்பட்டினம் நாடாளுமன்ற தொகுதி, நன்னிலம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வலங்கைமானை அடுத்த ஆவூர் கடைவீதியில் 100% வாக்குப்பதிவு வலியுறுத்தி நாட்டுப்புற கலைஞர்களால் விழிப்புணர்வு பாடல்கள் மூலம் வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு செய்யப்பட்டது. 


நிகழ்ச்சியில் வலங்கைமான் வட்டாட்சியர் ரஷ்யா பேகம், தேர்தல் துணை  வட்டாட்சியர் ரவி, மண்டல துணை வட்டாட்சியர் ஆனந்தன் உள்ளிட்ட  பலரும் உடன் இருந்தனர்.


-செய்தியாளர் தருண்சுரேஷ் 

No comments:

Post a Comment

Post Top Ad