வலங்கைமான் தென்குவளை வேலி அரசு உயர்நிலைப் பள்ளிக்கு, கும்பகோணம் நகைக் கடை நிறுவன அறக்கட்டளை சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கல். - தமிழக குரல் - திருவாரூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Thursday 21 March 2024

வலங்கைமான் தென்குவளை வேலி அரசு உயர்நிலைப் பள்ளிக்கு, கும்பகோணம் நகைக் கடை நிறுவன அறக்கட்டளை சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கல்.


தமிழகம் முழுவதும் பல கிளைகளைக் கொண்டு, கும்பகோணத்தில் செயல்படும் நகைக்கடை நிறுவனம் தன்னுடைய அறக்கட்டளை மற்றும் சமூகப் பொறுப்பு நிதி மூலம் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறது. அதன் ஒரு பகுதியாக திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் ஒன்றியத்தில் உள்ள  தென் குவளை வேலி அரசு உயர்நிலைப் பள்ளிக்கு இரண்டு லட்சத்து 98 ஆயிரம் மதிப்புள்ள பீரோ, டெஸ்குகள், மேஜை, நாற்காலிகள், எழுது பலகை, கரும்பலகைகள் உள்ளிட்ட பொருள்களை வழங்கியது. 


நிகழ்ச்சியில் கும்பகோணம் கிளை மேலாளர் ரஞ்சித்,துணை மேலாளர் ஜெயராமன் ஆகியோர் பொருட்களை  வழங்க பள்ளியின் தலைமை ஆசிரியை ஜான் பிரபா மற்றும் பள்ளி மேலாண்மைக் குழுவினர் பெற்றுக் கொண்டனர்.  மாணவர்களின் வரவேற்பு நடனம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியர்கள் விஜயகுமாரி, ராமமூர்த்தி, இளையராஜா, ரேணுகா, சூரியகுமார், ஊராட்சி மன்ற துணைத் தலைவர் பால. தண்டாயுதபாணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.-செய்தியாளர் தருண்சுரேஷ் 

No comments:

Post a Comment

Post Top Ad