மன்னார்குடி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் இருசக்கர வாகனத்தை திருடிய அண்ணன் தம்பியை காவல்துறையினர் கைது செய்து சிறையிலடைப்பு. - தமிழக குரல் - திருவாரூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Monday 12 February 2024

மன்னார்குடி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் இருசக்கர வாகனத்தை திருடிய அண்ணன் தம்பியை காவல்துறையினர் கைது செய்து சிறையிலடைப்பு.


திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் மாவட்ட அரசு தலைமை மருத்துவ மனை இயங்கி வருகிறது. இம் மருத்துவ மனைக்கு தினம் தோறும் நூற்றுக் கணக்கான நோயாளிகள் மற்றும் பொதுமக்கள் வந்து செல்கின்றனர். இவர்களின் இருசக்கர வாகனங்களை மர்மநபர்கள் திருடி செல்வதாக புகார்கள் எழுந்தன.  

இந்த நிலையில், மன்னார்குடி அடுத்த கானூர் பருத்திக்கோட்டை கிராமத்தை சேர்ந்த கேசவராஜ் (50), மகாதேவப்பட்டினம் சேர்ந்த ரஞ்சித்குமார் (30) ஆகியோரின் இருசக்கரவாகனம் கடந்த நவம்பர் மாதம் மன்னார்குடி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில்  திருடு போனது. 


இதுகுறித்து இருவரும்  மன்னார்குடி நகர காவல் நிலையத்தில்  புகார் கொடுத்ததின் அடிப்படையில் இரண்டு வாலிபர்களை சந்தேகத்தின் பேரில் நேற்று பிடித்த குற்றப்பிரிவு  போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். அதில், இருவரும் தஞ்சை மாவட்டம் மெலட்டூர் அடுத்த ரெங்கநாதபுரம் முருகேஷ் (21), முகில் சர்மா (20) என்றும் அண்ணன் தம்பிகளான இருவரும் சேர்ந்தே  இரண்டு பைக்குகளை திருடியதும் தெரிய வந்தது. 


மேலும், அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் இரண்டு பைக்குகளை போலீசார் கைப்பற்றினர். இதையடுத்து, அவர்கள் மீது வழக்கு பதிந்த நகர காவல்துறையினர் இருவரையும் கைது செய்து மன்னார்குடி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்து நீதிபதி உத்தரவின் பேரில் மன்னார்குடி கிளைச்சிறையில் அடைத்தனர். 


-செய்தியாளர் தருண்சுரேஷ் 

No comments:

Post a Comment

Post Top Ad