திருவாரூர் மாவட்ட காவல்துறை இணைய தளம் ஆன்லைன் மூலம் குற்றங்களை தடுக்கும் விதமாக காவல் துறை சார்பில் 200-க்கும் மேற்பட்ட தனியார் பள்ளி மாணவி, மாணவிகள் கலந்துகொண்டு இணைய தளம் ஆன்லைன் வழி குற்றங்கள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பேரணியினை திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
முன்னதாக ஆன்லைன் மூலம் லோன் பெற முயற்சிசெய்து பணம் இழப்பு ஏற்படுவது, சமூக வலைத்தளங்களில் நடைபெறும் குற்றங்களை கண்டுபிடிப்பது, செல்போன்களில் தேவையில்லாத லிங்க்களை தொட்டு ஹேக்கர்கள் மூலம் மிரட்டலுக்கு ஆளாவதை தடுக்க 1930 சைபர் க்ரைம் உதவி எண்ணில் புகார் தெரிவிக்க வேண்டும், www.cybercrime.gov.in என்ற மெயிலிலும் புகார் தெரிவிக்கலாம் என திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் விழிப்புணர்வு ஏற்படுத்தி பேசினார். இந்நிகழ்வில் மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர் மணிகண்டன், திருவாரூர் நகர காவல் நிலைய ஆய்வாளர் மோகன், திருவாரூர் இணையவழி குற்றகாவல் நிலையம் ஆய்வாளர் ஸ்ரீபிரியா, உதவி ஆய்வாளர் கணபதி உட்பட பலர் கலந்துகொண்டனர்.
- செய்தியாளர் தருண்சுரேஷ்
No comments:
Post a Comment