அதனை தொடர்ந்து வேலைவாய்ப்பு முகாமில் கலந்துகொண்ட தனியார் நிறுவனங்களில் 8 ஆம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு மற்றும் ஐ.டி.ஐ, டிப்ளமோ, பி.இ, நர்சிங் படிப்புகள் போன்ற கல்வித்தகுதியுடைய 18 முதல் 35 வயதிற்குட்பட்ட வேலைநாடும் இளைஞர்கள் மற்றும் மாற்றுத்திறனாளி இளைஞர்கள் என நேர்முகத்தேர்வில் கலந்து கொண்டு தேர்வானவர்களுக்கு பணி நியமன ஆணைகளை மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ வழங்கினார்.
இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது, திருவாரூர் மாவட்டத்தில் படித்து வேலைவாய்ப்பு தேடும் இளைஞர்களுக்கு தனியார் துறைகளில் பணியமர்த்தம் செய்யும் நோக்கத்தோடு வேலைவாய்ப்பு முகாம் நடத்துகிறது. அதன் அடிப்படையில் இந்த வருடம் நமது மாவட்டத்தில் நடைபெறும் 3-வது வேலைவாய்ப்பு முகாமாகும் மாணவ, மாணவியர்களுக்கு கல்லூரி முடிந்தவுடன் வேலைவாய்ப்பு முகாம்களில் நேர்முகத்தேர்வுகளில் கலந்து கொள்வது நேர்முகத்தேர்வை எதிர்கொள்ளும் அனுபவமாக இருக்கும்.
முதல் வேலைவாய்ப்பு கிடைக்கும் இடங்களில் சென்று வேலைகளை கற்றுக்கொண்டு அந்த அனுபவத்தின்படி உள்ளூர்களில் சுயதொழில் தொடங்க முயற்சிக்க வேண்டும். சென்னை, பெங்களூரில் உள்ள கம்பெனிகளில் வேலைக்குச்சென்று புதிய விஷயங்கள் கற்றுக்கொள்ளவும் வேண்டும். வேலைவாய்ப்பு முகாம் அனுபவங்களை கற்றுக்கொடுக்கும் இந்த வாய்ப்பினை அனைவருமே பயன்படுத்திக்கொள்ளவேண்டும் என பேசினார்.
இம்முகாமில், தொழில்துறை, சேவைத்துறை, விற்பனைத் துறைகளை போன்ற பல்வேறு துறைகளைச் சார்ந்த 150 மேற்பட்ட தனியார்துறை நிறுவனங்கள் சுமார் 5 ஆயிரம் தகுதியுள்ள நபர்களை வேலைக்கு தேர்ந்தெடுக்க உள்ளனர். என வேலைவாய்ப்பு அலுவலகம் நிர்வாகம் சார்பில் தெரிவித்துள்ளனர்.
இந்நிகச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் சண்முகநாதன், வருவாய் கோட்டாட்சியர் சங்கீதா, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் சந்திரசேகர் உள்ளிட்ட அரசு அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
- செய்தியாளர் தருண்சுரேஷ்
No comments:
Post a Comment