கொரடாச்சேரி அருகே பல ஆண்டுகாலமாக சேதமடைந்து காணும் பாலத்தில் கம்பிகள் மட்டுமே எஞ்சியுள்ள நிலையில் பாலத்தை சீரமைக்காத ஊராட்சி மன்ற நிர்வாகம்: ஆயிரக்கணக்கான பொதுமக்கள், விவசாயிகள் கடும் பாதிப்பு. - தமிழக குரல் - திருவாரூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Monday 19 February 2024

கொரடாச்சேரி அருகே பல ஆண்டுகாலமாக சேதமடைந்து காணும் பாலத்தில் கம்பிகள் மட்டுமே எஞ்சியுள்ள நிலையில் பாலத்தை சீரமைக்காத ஊராட்சி மன்ற நிர்வாகம்: ஆயிரக்கணக்கான பொதுமக்கள், விவசாயிகள் கடும் பாதிப்பு.


செட்டிசிமிலி வழியாக ஊர்குடி செல்லும் சாலையின் குறுக்கே கடந்த இரண்டு ஆண்டுக்கு மேலாக  சேதமடைந்து  காணும்  பாலத்தில் கம்பிகள் மட்டுமே  எஞ்சியுள்ள நிலையில் பாலத்தை சீரமைத்து தராத பெருமாளகரம்  ஊராட்சி மன்ற நிர்வாகத்தின் அலட்சியபோக்கால் ஆயிரக்கணக்கான பொதுமக்கள், விவசாயிகள் கடுமமையாக பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். 


திருவாரூர் மாவட்டம், கொரடாச்சேரி ஒன்றியத்திற்கு உட்பட்டது பெருமாளகரம் ஊராட்சி.  இவ் ஊராட்சியில் செட்டிசிமிலி, கோட்டகம், கிளாரியாகொல்லை, நன்குளம், சிமிலி மேலத்தெரு முதலான பல்வேறு கிராமங்கள் உள்ளன.  இவ்ஊராட்சியில் 1000த்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.

இப்பஞ்சாயத்திற்கு உட்பட்ட கிராம மக்கள் செட்டிசிமிலி பகுதியில் உள்ள வாய்க்கால் பாலத்தின் வழியாக 1 கிலோ மீட்டர் தூரம் வரை உள்ள ஊர்குடி கிராமத்தை கடந்து திருச்சி-நாகை தேசிய நெடுஞ்சாலை மார்க்கத்தை அடைந்து திருவாரூர், கொரடாச்சேரி, தஞ்சை, நாகை  முதலான பல்வேறு பகுதிகளுக்கு  வாகனங்கள் மூலமாக சென்று வந்தனர். மேலும் செட்டிசிமிலி பகுதியில் உள்ள 500 ஏக்கருக்கு மேல் உள்ள விவசாய நிலங்களில் விவசாய பணிகளுக்கான டிராக்டர், அறுவடை இயந்திரங்கள் உள்ளிட்டவை இந்த பாலத்தின் வழியாக செல்ல வேண்டும்.


இந்த வாய்க்கால் பாலம் பாதிக்கு மேல் உடைந்து இரண்டு ஆண்டுகளை கடந்தபோதிலும் தற்போது கம்பிகள் மட்டுமே எஞ்சி உள்ள  நிலையில் இப்பாலத்தை சீரமைத்து தரவேண்டி சம்மந்தப்பட்ட பெருமாளகரம் ஊராட்சி மன்றத்தலைவரும் திமுக கட்சியை சேர்ந்தவருமான பாலாஜிவிடம் கிராம மக்கள் பலமுறை முறையீட்டும், கிராம சபா கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றிய போதிலும் இதுவரை இப்பாலம் சீரமைக்கப்டாமல் இருந்து வருகிறது.


 இருப்பினும் இப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மாற்று மார்க்கமாக 6 கிலோமீட்டர் தூரத்தை சுற்றி திருச்சி-நாகை தேசிய நெடுஞ்சாலை மார்க்கத்தை அடைவதற்கு அஞ்சி ஆபத்தான நிலையில் உள்ள செட்டிசிமிலி பாலத்தின் வழியாக அடிக்கடி பயணித்துவரும் பொதுமக்கள், முதியவர்கள், பள்ளி குழந்தைகள், மாற்றுதிறனாளிகள் விபத்துக்கு உள்ளாகி அவதியுற்று வருகின்றனர்.


இதுதவிர இப்பகுதியில் உள்ள விவசாய நிலங்களுக்கு நெல் அறுவடை இயந்திரங்கள், டிராக்டர்கள் உள்ளிட்ட வாகனங்களின் ஓட்டுநர்கள் உயிருக்கு அஞ்சி இப்பாலத்தை கடந்துவர மறுத்து வருவதால் விவசாயிகள் பொருளாதார இழப்புக்கு உள்ளாகி வருகின்றனர்.

       

மேலும் இப்பகுதியில் உள்ள மயானத்திற்கு இறந்தவர்களின் உடலை தூக்கி செல்ல முடியாத அளவிற்கு பாலம் கடுமையாக சேதம்மடைந்து இருப்பதால் கிராம மக்கள் அவதியுற்று வருகின்றனர்.


இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து இப்பாலத்தை முற்றாக இடித்து உடனடியாக புதிய பாலம் கட்டி தராவிடில் சாலைமறியல் போராட்டம் உள்ளிட்ட தொடர் போராட்டங்களில் ஈடுபடபோவதாகவும் பெருமாளகரம் ஊராட்சியை சேர்ந்த கிராம மக்கள் அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.


-செய்தியாளர் தருண்சுரேஷ் 

No comments:

Post a Comment

Post Top Ad