பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தினருக்கு பால் பரிசோதனைகருவி மற்றும் பால்கேன் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் வழங்கினார். - தமிழக குரல் - திருவாரூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Monday, 19 February 2024

பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தினருக்கு பால் பரிசோதனைகருவி மற்றும் பால்கேன் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.


திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில்  காரைக்கால் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழகத்தின்  சமூக பொறுப்புணர்வு திட்டம் மூலம் ரூபாய் 9 லட்சம்  மதிப்பில் பால்பரிசோதனை கருவி மற்றும் பால் கேன்களை பெறப்பட்டதை 17 பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்களுக்கு  திருவாரூர் மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ வழங்கினார்.


இதனைத்தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தினருக்கு தெரிவித்ததாவது.. திருவாரூர் மாவட்டத்தில் நலிவுற்றிருந்த பால் உற்பத்தியாளர் சங்கங்களுக்கு உதவிகள் செய்து அதன் மூலம் சங்கங்களை மேம்படுத்தும் நோக்கில் இந்த சங்கங்களுக்கு பால் பரிசோதனை கருவி மற்றும் பால் கேன்கள் வழங்கப்பட்டுள்ளது.

இவற்றை கொண்டு சங்கங்கள் தங்களை மேம்படுத்திக் கொண்டு உற்பத்தியாளர்களுக்கும் உதவி செய்திட வேண்டும். மேலும் சமூக பொறுப்புணர்வு திட்டத்தின் மூலம் சுமார் ரூ.9 லட்சம் மதிப்பீட்டில் பால் பரிசோதனை கருவி , பால் கேன்களை வழங்கிய   காரைக்கால் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழகத்தின் நிர்வாகத்தினருக்கு நன்றியை மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.


இந்நிகழ்ச்சியில் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழக பொதுமேலாளர் மாறன், பால் கூட்டுறவு சங்கங்களின் துணைப்பதிவாளர் நவராஜ், ஆவின் மேலாளர் சரவணக்குமார், எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழக சமூக பொறுப்பு திட்ட அலுவலர் விஜய்கண்ணன், உதவி பொறியாளர் முருகானந்தம், KRDS NGO உட்பட பலர் கலந்து கொண்டனர்.


-செய்தியாளர் தருண்சுரேஷ் 

No comments:

Post a Comment

Post Top Ad