திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை ஒன்றியத்துக்கு உட்பட்ட குன்னலூர் பகுதியை சேர்ந்த பாலசுப்பிரமணியன் இவருடைய மகன் தமிழ் குமரன் வயது 19 இவர் அப்பகுதியில் உள்ள மேல்நிலைப்பள்ளியின் அருகிலுள்ள குடிநீர் தேக்க தொட்டி வழியாக சென்ற பொழுது மேல்நிலை நீர்த்தக்க தொட்டியிலிருந்து மின் கசிவு ஏற்பட்டு எதிர்பாராமல் தமிழ் குமரன் மீது மின்சாரம் பாய்ந்து தூக்கி எறியப்பட்டார்.
சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக மயக்க நிலையில் இருந்த இளைஞரை அந்த அக்கம்பக்கத்தினர் அந்த இளைஞரை மீட்டு உடனடியாக திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் குன்னலூர் பகுதியில் பல ஆண்டுகளாக குடி நீர்தேக்க தொட்டி மற்றும் மின்கம்பங்கள் பழுதடைந்தும் அதனை மாற்றாமல் இருந்துள்ளதால் இந்த விபத்து நடந்துருக்கிறது என்று அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
எனவே குடிநீர் தேக்க தொட்டி மற்றும் மின் கம்பத்தினை இனிமேல் எந்த ஒரு பெரும் உயிர் சேதம் ஏற்படும் முன் குடி நீர்த்தேக்க தொட்டியின் மின் கம்பத்தினை சீரமைத்து மக்கள் பயன்பாட்டிற்காக வழங்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-செய்தியாளர் தருண்சுரேஷ்
No comments:
Post a Comment