திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு திருவாரூர் மாவட்ட மைய தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் பத்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் கோரிக்கைகளாக 2024 ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தல் பணிகளை தொய்வின்றி மேற்கொள்ள முழுமையான நிதி ஒதுக்கீட்டினை உடன் வழங்கவேண்டும். வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைதுறையில் மூன்று ஆண்டுகளாக காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்களை உடன் நிரப்பிடவேண்டும்.
அலுவலர்களின் பணித்தன்மையை கருத்தில்கொண்டு அனைத்துநிலை அலுவலர்களுக்கும் மேம்படுத்தப்பட்ட ஊதியம் மற்றும் தனி ஊதியம் வழங்கிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்,
உண்ணாவிரதப் போராட்டத்தில் திருவாரூர் வருவாய்த்துறை அலுவலர் சங்க தலைவர் மகேஷ் தலைமையில் நடைபெற்றது, இதில் மாநிலபொருளாளர் சோமசுந்தரம் , மாவட்டதுணை தலைவர் அசோக் , மாவட்டச் செயலாளர் விஜய்ஆனந்த் , மாவட்ட பொருளாளர் ரவி , மாவட்ட இணை செயலாளர்கள் ராமகிருஷ்ணன் , மற்றும் இளமாறன் , ரவிச்சந்திரன் உட்பட அரசு ஊழியர்கள் சங்க நிர்வாகிகள், வருவாய்த்துறை அலுவலர்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
- செய்தியாளர் தருண்சுரேஷ்
No comments:
Post a Comment