முத்துப்பேட்டையில் தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் போதை ஒழிப்பு மற்றும் கல்வி விழிப்புணர்வு பேரணி. - தமிழக குரல் - திருவாரூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Tuesday, 13 February 2024

முத்துப்பேட்டையில் தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் போதை ஒழிப்பு மற்றும் கல்வி விழிப்புணர்வு பேரணி.


திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் திருவாரூர் தெற்கு மாவட்ட தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக போதை ஒழிப்பு மற்றும் கல்வி விழிப்புணர்வு பேரணி மாவட்ட செயலாளர் அப்துர் ரஹ்மான் தலைமையில் நடைபெற்றது.


இப்பேரணிக்கு மாவட்ட தலைவர் யாசர் அரபாத், மாவட்ட பொருளாளர் ஹாஜா மைதீன், துணை செயலாளர்கள் ஹாஜா மைதீன், அப்துர் ரஷீத், முகமது அசாருதீன் அகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக முத்துப்பேட்டை புதிய பேருந்து நிலையம் துவங்கிய பிரமாண்டமான போதை ஒழிப்பு மற்றும் கல்வி விழிப்புணர்வு பேரணி ஆசாத்நகர், திருத்துறைப்பூண்டி சாலை, பழைய பேரூந்து நிலையம், நீயூ பஜார் வழியாக பேங் தெரு வந்து தனியார் திருமண மண்டபம் அடைந்தன.

மாநில  பேச்சாளர் அப்துல் ரஹ்மான், மாவட்ட நிர்வாகிகள் ஆகியோர் விழிப்புணர்வு கோஷங்களை எழுப்பினர். இதில் க்கும் மேற்பட்ட சிறுவர்கள் பெண்கள் உட்பட 500க்கும் மேற்பட்ட தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பினர் குடும்பத்துடன் கலந்துக்கொண்டு கையில் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்திபடி பேரணியாக சென்றனர்.


அதனை தொடர்ந்து மக்தப் மதரசா மாணவர்களுக்கான மார்க்க அறிவுத்திறன் போட்டியில் பங்கேற்று தேர்ச்சி பெற்றவர்களுக்கு பரிசுளிப்பு நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வில் மாநில மேலாண்மை குழு உறுப்பினர் சபீர் அலி உரையாற்றினார். இறுதியாக மாவட்ட துணை செயலாளர் முகமது வாசிம் நன்றி கூறினார். இந்நிகழ்வில் அனைத்து கிளை நிர்வாகிகள், அணி பொறுப்பாளர்கள், மாவட்ட பேச்சாளர்கள் கலந்து கொண்டனர்.


-செய்தியாளர் தருண்சுரேஷ் 

No comments:

Post a Comment

Post Top Ad