அப்பள தயாரிக்கும் இயந்திரத்தில் சிக்கி படுகாயம் அடைந்த பெண்ணிற்கு 32 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் அப்பள நிறுவனம் இழப்பீடு வழங்க திருவாரூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவு. - தமிழக குரல் - திருவாரூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Wednesday, 14 February 2024

அப்பள தயாரிக்கும் இயந்திரத்தில் சிக்கி படுகாயம் அடைந்த பெண்ணிற்கு 32 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் அப்பள நிறுவனம் இழப்பீடு வழங்க திருவாரூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவு.


திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே நெடும்பலம் கிராமத்தைச் சேர்ந்த பிரவீன்ராஜ் இவரது மனைவி கார்த்திகா. இவர் அதே பகுதியில் உள்ள சீனிவாசன் என்பவரது தனியார் அப்பள கம்பெனியில் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் வேலை செய்து கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக அப்பள தயாரிக்கும் இயந்திரத்தில் தலைமுடி சிக்கி மொத்த தலைமுடியும் தோளுடன் வந்துள்ளது.


இதில் படுகாயமடைந்த கார்த்திகாவை தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவர் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் உயிர் தப்பினார்.

இந்த நிலையில் அப்பள நிறுவனம் சார்பில் எந்த நிவாரண உதவிகளும் செய்ய மறுத்து உள்ளனர். இதனை தொடர்ந்து திருவாரூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் புகார் மனு அளிக்கப்பட்டது. இதன் விசாரணை இன்று ஆணைய தலைவர் சேகர் தலைமையில் நடைபெற்றது.


அப்போது பாதிக்கப்பட்ட பெண் காயத்திற்கு இழப்பீடாக 30 லட்சம் ரூபாய், மன உளைச்சலுக்கும் 2 லட்ச ரூபாய் மற்றும் வழக்கு செலவு தொகையாக 10 ஆயிரம் ரூபாய் அப்பள நிறுவனம் வழங்க வேண்டும் என உத்தரவிட்டார். இதனை ஒரு மாத காலத்திற்குள் வழங்க வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது .


- செய்தியாளர் தருண்சுரேஷ்


Reporter Dharunsuresh Thiruvarur, [14-02-2024 21:54]

 

No comments:

Post a Comment

Post Top Ad