திருவாரூரில் பழைய ஓய்வூதியம் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து அரசு அலுவலர்கள் வேலைநிறுத்தம் செய்து கண்டன முழக்கங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவாரூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு திருவாரூர் மாவட்ட தமிழ்நாடு அரசு அனைத்து அலுவலர்கள் ஆசிரியர்கள் மற்றும் உள்ளாட்சி பணியாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வேலைநிறுத்தம் செய்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் புதிய ஓய்வு திட்டத்தை ரத்துசெய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தவேண்டும், நிறுத்தி வைத்துள்ள சரண்விடுப்பு உள்ளிட்ட பணபலன்களை மீண்டும் வழங்கிட வேண்டும், அரசாணை 243 திரும்ப பெறவேண்டும். மற்றும் அனைத்து அரசு அலுவலர்கள் ஆசிரியர்களுக்கு பழைய நிலையிலேயே உயர் கல்விக்கான ஊக்க தொகை ஊதியம் வழங்கபடவேண்டும்.
மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் பணிபுரியும் அனைத்து பணியாளர்களையும் அரசு ஊழியர்களாக அறிவிக்கவேண்டும், 12,526 ஊராட்சிகளில் பணிபுரியும் மேல்நிலை நீர்தேக்கதொட்டி இயக்குபவர்கள், தூய்மை பணியாளர்கள், தூய்மை காவலர்களுக்கு காலமுறைஊதியம் வழங்கிடவேண்டும் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வேலைநிறுத்தம் செய்து கோஷமிட்டு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மேலும் கோரிக்கைகளை நிறைவேற்றாத பட்சத்தில் 26 ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் என தெரிவித்துள்ளனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு அனைத்து அரசு அலுவலர்கள் ஆசிரியர்கள் மற்றும் உள்ளாட்சி பணியாளர் சங்கங்களின் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ரெ. ஈவேரா தலைமையில் நடைபெற்றது.
இதில் நிர்வாகிகள் மோகன், பெருமாள், டேவிட், சத்தியநாதன், வீரசேகரன், பாலசுப்பிரமணியன், வேதமூர்த்தி, மணிகண்டன், சந்திரமோகன், சரவணகுமார், பிரகாஷ், பாலசுந்தரம் உட்பட ஏராளமான அரசு அலுவலர்கள் ,ஆசிரியர்கள் உள்ளிட்டோர் பலர் கலந்து கொண்டு கண்டன முழக்கங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
-செய்தியாளர் தருண்சுரேஷ்
No comments:
Post a Comment