தஞ்சாவூரில் நாளை 17ஆம் தேதி டெல்லி போராட்டத்திற்கு ஆதரவாக ரயில் மறியல் போராட்டம் விவசாய சங்கம் அறிவிப்பு... - தமிழக குரல் - திருவாரூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Friday, 16 February 2024

தஞ்சாவூரில் நாளை 17ஆம் தேதி டெல்லி போராட்டத்திற்கு ஆதரவாக ரயில் மறியல் போராட்டம் விவசாய சங்கம் அறிவிப்பு...


தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பி ஆர்.பாண்டியன் திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி  செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது தெரிவித்ததாவது: மத்திய அரசு பிரதமர் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும். குறைந்தபட்ச ஆதார விலை வழங்க வேண்டும். எம் எஸ் சுவாமிநாதன் குழு பரிந்துரையை நிறைவேற்ற வேண்டும்.


மாநிலங்கள் வழங்கும இலவச மின்சாரத்தை ரத்து செய்ய கோரும் மத்திய அரசின் மின்சார வாரிய ஒழுங்குமுறை சட்டத்தை திரும்ப பெற வேண்டும்.கடன் முழுமையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என்கிற கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் டெல்லி நோக்கி கடந்த 13 ஆம் தேதி முதல் லட்சக்கணக்கான டிராக்டர்களில் செல்ல முயற்சிக்கிறார்கள். 
 

விவசாயிகள் பேரணியை ஹரியானா மாநில எல்லையில் தடுத்து நிறுத்தி துணை ராணுவப்படை மற்றும் காவல்துறையை கொண்டு துப்பாக்கி சூடு நடத்தப்படுகிறது. ரப்பர் குண்டுகள் மூலம் நூற்றுக்கணக்கான விவசாயிகள் காயப்படுத்தப்பட்டு இருக்கிறார்கள். கண்ணீர் புகை குண்டு வீசப்படுகிறது.


ட்ரோன் மூலம் ரசாயன பொடி தூவப்படுவதால் உடல் நல பாதிப்பு ஏற்படுகிறது. உயிரை இழந்தாலும் உரிமையை மீட்போம் என்கிற முழக்கத்தோடு கடந்த போராட்டத்தை விட இப்போராட்டம் பல மடங்கு கூடுதலான வகையில் தீவிரமடைந்து வருகிறது.15-க்கும் மேற்பட்ட சாலைகள் மூடப்பட்டிருக்கிறது. 


விவசாயிகள் நீதி கேட்டு லட்சக்கணக்கான டிராக்டர்களில் டெல்லி நோக்கி அணிவகுத்த நிலையில் டெல்லி முழுவதும் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது. ஹரியானா .உத்தர பிரதேசம்,பஞ்சாப் மாநில எல்லை பகுதிகள் மிகப்பெரும் போர் நடப்பது போல காட்சியளிப்பது வேதனை அளிக்கிறது.விவசாயிகள் மீது மத்திய அரசு நடத்தும் தாக்குதலை பார்த்து உலகமே வெட்சி தலை குனியும் நிலை ஏற்பட்டுள்ளது.


நேற்றைய (15.02.2024) தினம் போராட்டத்தின் தீவிரத்தை உணர்ந்து மத்திய அரசு நடத்திய பேச்சு வார்த்தை சமூகமாக நடைபெற்றது. கோரிக்கைகள் முழுமையும் மத்திய அரசால் ஏற்கப்பட்டுள்ளது.
 

மீண்டும் வரும் 18ம் தேதி ஞாயிற்றுக்கிழமை இறுதிக்கட்ட பேச்சுவார்த்தை டெல்லியில் நடத்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அக்கூட்டத்தில் தமிழ்நாட்டின் சார்பில்  பி ஆர் பாண்டியன் பங்கேற்கிறார். அக்கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கைக்கு நியாயமான தீர்வு கிடைக்கும் என்கிற எதிர்பார்ப்போடு காத்திருக்கிறோம்.


எனவே பிரதமர் உடனடியாக விவசாயிகள் மீது நடத்தப்படுகிற தாக்குதல்களை கைவிட்டு தடுப்புகளை அகற்றி டெல்லிக்குள் விவசாயிகள் பேரணியை அனுமதிக்க முன்வர வேண்டும், விவசாயிகள் மீதான தாக்குதல்களுக்கு பிரதமர் பொருப்பேற்க வேண்டும்.


டெல்லி போராட்டத்திற்கு ஆதரவாக நாளை (17.02.2024) தஞ்சாவூரில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் பங்கேற்கும் ரயில் மறியல் போராட்டம் நடைபெற உள்ளது. போராட்டத்தில் SKM (NP) அமைப்பின் தமிழக தலைவர் பி.அய்யாக்கண்ணு, ஒருங்கிணைப்பாளர் நான் பிஆர்.பாண்டியன் தலைமையேற்க உள்ளோம் என்றார்.


-செய்தியாளர் தருண்சுரேஷ்

No comments:

Post a Comment

Post Top Ad