நீடாமங்கலத்தில் நடைபெற்ற இணைய வழி குற்றங்களை தடுப்பது குறித்த விழிப்புணர்வு பேரணியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் குடியசைத்து தொடங்கி வைத்தார்.
திருவாரூர் மாவட்ட காவல்துறை சார்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் உத்தரையின்படி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இணைய வழி குற்றங்கள் குறித்த விழிப்புணர்வு கூட்டங்களும், பிரச்சாரங்களும் நடைபெற்று வருகின்றது.
அதன் அடிப்படையில் இன்று மன்னார்குடி அருகே நீடாமங்கலம் அண்ணா சிலையிலிருந்து விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பேரணியை திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
தனியார் மற்றும் அரசு பள்ளிகளை சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர் பேரணியில் பங்கேற்று இணைய வழி குற்றங்கள் குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை கைகளில் ஏந்தி ஊர்வலமாக சென்றனர். விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களும் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது. நீடாமங்கலத்தின் முக்கிய வீதிகள் வழியாக சென்ற மாணவர்களின் பேரணி பெரியார் சிலை அருகே நிறைவடைந்தது.
பேரணியில் மன்னார்குடி துணை காவல் கண்காணிப்பாளர் அஸ்வத் அண்டோ ஆரோக்கிய ராஜ், நீடாமங்கலம் காவல் ஆய்வாளர் பழனியப்பன், உதவி ஆய்வாளர் சந்தோஷ் குமார், மாவட்ட சைபர் கிரைம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் கணபதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
ஓ.டி. பி. எண்களை பிற நபர்களிடம் பகிறக்கூடாது, கடன் வழங்குவதாக கூறும் போலியான செயலிகளை நம்ப கூடாது, மாணவர்கள் செல்போன் பயன்படுத்துவதை குறைத்துக்கொள்ள வேண்டும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் மாணவர்களுக்கு அறிவுரை கூறினார். மேலும் சைபர் கிரைம் குறித்த மாணவர்களின் பல்வேறு கேள்விகளுக்கு காவல்துறையினர் உரிய விளக்கமளித்தனர்.
-செய்தியாளர் தருண்சுரேஷ்
No comments:
Post a Comment