திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பாடகச்சேரி ஊராட்சி பகுதியில் வலங்கைமான்- நீடாமங்கலம் சாலை அருகே சுமார் பத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளது. அப்பகுதி மக்களின் குடிநீர் தேவையை நிறைவு செய்யும் வகையில் இந்தியன் மார்க் பம்பு அப்பகுதியில் முன்பு அமைக்கப்பட்டது.
இதன் மூலம் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் குடிநீரை பயன் படுத்தி வந்தனர். மேலும் அப்பகுதியில் விளைநிலங்களில் வேலை செய்யும் விவசாயிகள் மற்றும் விவசாய தொழிலாளர்கள் குடிநீர் தேவைக்காக இந்த அடிபம்பு பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில் இந்தியன் மார்க் பம்பு கடந்த சில மாதங்களுக்கு முன்பாக சேதம் அடைந்த நிலையில் இருந்து வருகிறது.
அதனை அடுத்து ஊராட்சி நிர்வாகம் இந்தியன் மார்க் பம்பினை சரி செய்வதற்காக அதன் மேல் பகுதியை எடுத்துச் சென்றனர். இருப்பினும் இதுவரை பம்பினை சரி செய்யாததால் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் குடிநீருக்கு மிகவும் சிரமம் அடைந்து வருகின்றனர்.
எனவே ஊராட்சி நிர்வாக மேலும் காலதாமதம் செய்யாமல் சேதமான அடி பம்பை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- செய்தியாளர் தருண்சுரேஷ்
No comments:
Post a Comment