பல்வேறு சிறப்புகளைக்கொண்ட தொன்மைவாய்ந்த இவ்விரு ஆலயங்களின் மகா கும்பாபிஷேக விழாவினையொட்டி கடந்த 3 தினங்களாக யாகசாலை பூஜைகள் நடைபெற்றது. இதில் நூற்றுக்கணக்கான வேதவிற்பன்னர்கள் கலந்துகொண்டு யாகவேள்வி பூஜை நடத்தி யாகசாலையில் உள்ள புனிததீர்த்த கடங்களுக்கு சிறப்பு பூஜைகளை நடத்தினர்.
இன்று யாகசாலை பூஜையின் நிறைவாக மகாபூர்ணாகதி தீபாராதனை நடைபெற்றது. இதனை தொடர்ந்து யாகசாலையில் இருந்து சிவாச்சாரியார்கள் மற்றும் பட்டாச்சாரியார்கள் புனித தீர்த்த கடங்களை சுமந்து ஆலய பிரகாரத்தினை வலம்வந்து ஆலய கோபுர விமான கலசங்களுக்கு சிறப்பு பூஜை நடத்தினர்.
தொடர்ந்து பட்டாச்சாரியார்கள் பெருமாள் ஆலய கோபுர விமான கலசங்கள் மீதும், சிவாச்சாரியார்கள் சிவாலயத்தின் கோபுர விமான கலசங்கள் மீதும் புனித தீர்தத்தை ஊற்றியும், மகா தீபாராதனை காண்பித்தும் கும்பாபிஷேகத்தை நடத்திவைத்தனர்.
இவ்விரு ஆலய கும்பாபிஷேக விழாவில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு கும்பாபிஷேகத்தை கண்டுகளித்து சுவாமி தரிசனம் செய்தனர். குறிப்பாக கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஸ்ரீவிஸ்வநாதர் சிவாலயத்தில் பல லட்ச ரூபாய் மதிப்பிலான சுவாமி சிலைகள் களவு போயிருந்த நிலையில் இத்தகைய சிலைகள் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கண்டுபிடிக்கப்பட்டது. இத்தகைய சுவாமி சிலைகள் இன்று நடைபெற்ற குடமுழுக்கு விழாவின்போது சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
- செய்தியாளர் தருண்சுரேஷ்
No comments:
Post a Comment