திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் மகாகவி பாரதியார் நூற்றாண்டு நினைவு அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், 145 மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழா நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு பள்ளியின் தலைமை ஆசிரியை எம். கணேஸ்வதி முன்னிலை வகி, பள்ளியின் உதவி தலைமை ஆசிரியை லலிதா அனைவரையும் வரவேற்று பேசினார். பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் சோம. மாணிக்கவாசகம், ஆலோசகர் பா.சிவனேசன், பொருளாளர் புருஷோத்தமன், துணைத் தலைவர் சரவணன், வி.சி. ராஜேந்திரன், ஆண்கள் மேல்நிலைப்பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் க. செல்வம்,பொருளாளர் எஸ். ஆர். ராஜேஷ் மற்றும் ஆசிரிய- ஆசிரியைகள், மாணவிகள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
- செய்தியாளர் தருண்சுரேஷ்
No comments:
Post a Comment