திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் ஒன்றியம் தென் குவளை வேலி ஊராட்சியில் ரங்கையன், குருமூர்த்தி, சாமியய்யா, ராமன், செண்பகவல்லி, சுந்தராம்பாள் ஆகியவர்கள் மாற்றுக் கட்சியில் இருந்து விலகி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வலங்கைமான் ஒன்றிய செயலாளர் எஸ். எம். செந்தில்குமார் தலைமையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் தங்களை இணைத்துக் கொண்டார்கள்.
இந்நிகழ்ச்சியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய துணை செயலாளர் கே. செல்வராஜ் ,தமிழ்நாடு விவசாய சங்க ஒன்றிய தலைவர் எம். கலியபெருமாள், கட்சிதுணை களத்தில் எஸ் .ஆர். ரவி உள்பட பலர் கலந்து கொண்டனர். அப்பகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கொடியினை வலங்கைமான் ஒன்றிய செயலாளர் எஸ்.எம். செந்தில்குமார் ஏற்றி வைத்தார்.
- செய்தியாளர் தருண்சுரேஷ்
No comments:
Post a Comment