ஆனால், இந்தக் கடைகள் மற்றும் ஆடு அடிக்கும் தொட்டி கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டு பல ஆண்டுகள் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வரவில்லை. இதனை சுட்டிக்காட்டி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போராட்டம் அறிவித்தது. பேச்சு வார்த்தைக்கு பின்னர் வணிக வளாகத்தில் இறைச்சிக் கடைகள் சில பயன்பாட்டுக்கு வந்துள்ளது.
இந்நிலையில் 2015-16 நிதி ஆண்டில் கட்டப்பட்ட ஆடு அடிக்கும் தொட்டி தற்போது வரை பயன்பாட்டுக்கு வரவில்லை. ஆடுகளை வெட்டுவதற்கு முன்பாக சுகாதார ஆய்வாளர் ஆய்வு செய்து ஆடுகளை வெட்ட வேண்டும். ஆனால் இந்த நடைமுறை பின்பற்றுவதாக தெரியவில்லை.
மேலும் குடவாசல் ஓகை பகுதியில் இருந்து அத்திக்கடை வரை பல இடங்களில் மீன் கடைகள் மற்றும் ஆட்டு இறைச்சி கடைகள் காலை ஓரத்தில் ஆங்காங்கே வைக்கப்பட்டுள்ளன. ஆடுகளை சாலை ஓரத்திலேயே அறுக்கும் போது அவ் வழியாக செல்லும் பொதுமக்களும், பள்ளி செல்லும் மாணவர்களும் அச்சத்துடன், பார்த்து செல்லும் நிலையும் உள்ளது.
இது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் சுந்தரமூர்த்தி கூறுகையில், பேரூராட்சி நிர்வாகம் உடனடியாக சுகாதாரமான முறையில் இறைச்சிகைகளை விற்பனை செய்ய சாலை ஓரங்களில் உள்ள அனைத்து கடைகளையும் இறப்பு மார்க்கெட் கொண்டுவர வேண்டும், சுகாதார ஆய்வாளர் ஆடுகளை ஆய்வு செய்து காதில் கடுக்கான் சீல் வைத்து முறைப்படி இறைச்சிகளை விற்பனை செய்ய நடைமுறைப்படுத்த வேண்டும், ஆடு அடிக்கும் தொட்டியை சீர் செய்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்று தெரிவித்தனர்.
-செய்தியாளர் தருண்சுரேஷ்
No comments:
Post a Comment