திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் கடைவீதியில் தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் பெருந்திரள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ் மாநில விவசாயத் தொழிலாளர் சங்க ஒன்றிய தலைவர் ஜி.பிரபாகரன், ஒன்றிய செயலாளர் ஜி. ரவி ஆகியோர் தலைமை தாங்கினர், ஒன்றிய பொருளாளர் ஏ.மருதையன், ஒன்றியதுணைச் செயலாளர் எஸ்.பி.செல்வகுமார், ஒன்றிய துணைத் தலைவர் ஆர். சின்னத்துரைஆகியோர் முன்னிலை வகித்தனர்.
வலங்கைமான் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய செயலாளர் எஸ். எம். செந்தில் குமார் கண்டன விளக்க உரையாற்றினார். 100 நாள் வேலை திட்டத்தை 200 நாளாக உயர்த்தவும், ஒரு நாள் ஊதியத்தை 600 ரூபாயாக உயர்த்தவும், 100 நாள் வேலை திட்டத்தில் தமிழகத்துக்கு வரவேண்டிய நிதி நிலுவையை உடனடியாக வழங்கவும், விவசாய தொழிலாளர் நலவாரியம் அமைக்கவும் மற்றும் பல கோரிக்கைகளை விளக்கி பேசினார்கள்.
நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கே. செல்வராஜ், எஸ். உதயகுமார், எம். கலியபெருமாள், டி. கலியமூர்த்தி, எம். கண்ணையன், பி. பாக்யராஜ்,எஸ் தேவிகா மற்றும் கிளை செயலாளர்கள் உள்ளிட்டோர் பல கலந்து கொண்டு பங்கேற்றனர்
- செய்தியாளர் தருண்சுரேஷ்
No comments:
Post a Comment