புதிய பேருந்து நிலையம் வணிக வளாகங்கள் அமைப்பதற்கு மாவட்ட ஆட்சியர் சாரு ஸ்ரீ, சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன் ஆகியோர் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டு துவக்கி வைத்தனர். - தமிழக குரல் - திருவாரூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Thursday, 25 January 2024

புதிய பேருந்து நிலையம் வணிக வளாகங்கள் அமைப்பதற்கு மாவட்ட ஆட்சியர் சாரு ஸ்ரீ, சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன் ஆகியோர் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டு துவக்கி வைத்தனர்.


திருவாரூரில் 41 கோடி ரூபாய் மதிப்பில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் புதிய பேருந்து நிலையம் வணிக வளாகங்கள் அமைப்பதற்கு  மாவட்ட ஆட்சியர் சாரு ஸ்ரீ, சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன் ஆகியோர் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டு துவக்கி வைத்தனர்.


திருவாரூர் நகரப் பகுதியில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் பழைய பேருந்து நிலையத்தை முன்மாதிரி பேருந்து நிலையமாக மாற்றும் வகையில் 16 கோடியே 9 லட்சம் ரூபாய் மதிப்பிலும் மார்க்கெட் மற்றும் புதிய வணிக வளாகம் 13 கோடியே 27 லட்சம் ரூபாய் மதிப்பிலும் மீன் மார்க்கெட் ஐந்து கூடிய 42 லட்சம் ரூபாய் மதிப்பிலும் திருவாரூர் நகரப் பகுதியில் மட்டும் 34 கோடியே 99 லட்சம் ரூபாய் மதிப்பில் வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ மற்றும் திமுக மாவட்ட செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான பூண்டி கலைவாணன் தலைமையில் அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.

இதனை தொடர்ந்து நீலக்குடி பகுதியில் அமைந்துள்ள தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தையும் கேந்திர வித்யாலயா மற்றும் பேராசிரியர்கள் குடியிருப்பு பகுதிகளை இணைக்கும் வகையில் சுமார் 6 கோடியே 25 லட்சம் ரூபாய் மதிப்பிலான வெட்டார் குறுக்கே புதிய பாலம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழாவை மாவட்ட ஆட்சியர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன் பல்கலைக்கழக துணைவேந்தர் கிருஷ்ணன் ஆகியோர் தொடங்கி வைத்தனர் இந்த நிகழ்ச்சியில் நகரமன்ற தலைவர் புவனா பிரியா செந்தில் மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர் கலியபெருமாள் திமுக நகர செயலாளர் ஆகியோர் பங்கேற்றனர்.


- செய்தியாளர் தருண்சுரேஷ்

No comments:

Post a Comment

Post Top Ad