திருவாரூர் மாவட்டம் முழுவதும் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் கருப்பு பேஜ் அணிந்து உண்ணாவிரத போராட்டம். - தமிழக குரல் - திருவாரூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Wednesday, 31 January 2024

திருவாரூர் மாவட்டம் முழுவதும் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் கருப்பு பேஜ் அணிந்து உண்ணாவிரத போராட்டம்.


திருவாரூர் மாவட்ட தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் மாவட்டத்தின் பி எம் ஏ ஒய் திட்டத்தில் 11 ஆயிரத்து 59 வீடுகளுக்கு நிதி விடுவிக்கப்பட்ட தொகையினை அரசு அலுவலர்களிடம் திரும்ப வசூல் செய்திட மாவட்ட நிர்வாகம் உத்தரவு விட்டுள்ளதை ரத்து செய்யக்கோரி தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் கருப்பு பேஜ் அணிந்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.


இந்த உண்ணாவிரத போராட்டத்தில் திருவாரூர் ஊராட்சி ஒன்றிய அலுவலக முகப்பு வாயிலில் நடைபெற்ற பங்கேற்ற மாநில பொதுச் செயலாளர் எஸ் பாரி மாநில துணைத்தலைவர் சௌந்தர பாண்டியன் மாநில செயலாளர் ஜம்ரூத் நிஷா முன்னாள் மாநிலத் துணைத் தலைவர் புஷ்பநாதன் மாவட்டத் தலைவர்  வசந்தன் மாவட்ட செயலாளர் செந்தில் பொருளாளர் சிவக்குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் பங்கேற்றனர்.

இதன் தொடர்ச்சியாக மாவட்டத்தின் பிற பகுதிகளான நன்னிலம், கொரடாச்சேரி, குடவாசல், வலங்கைமான், நீடாமங்கலம், மன்னார்குடி, கோட்டூர், திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை உள்ளிட்ட ஊராட்சி ஒன்றிய அலுவலக முகப்பு வாயில்  முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.


இப்போராட்டத்தில் நன்னிலத்தில் கதிரவன் நெடுஞ்செழியன், சத்தியமூர்த்தி,   குடவாசல் பகுதில் பன்னீர்செல்வம் ,ராஜாராமன்,  அமர்நாத் மற்றும் கொரடாச்சேரியில் கண்ணன், முரளி செல்வகணபதி லட்சுமி அதே போல் வலங்கைமானில் பிரபு , ரமேஷ் ,ராஜசேகரன் நீடாமங்கலத்தில் நேரு, குமார் ராமமூர்த்தியும்.  


மன்னார்குடியில்  இளரா, சுந்தர்ராஜன், பாண்டியன், மோகன்  கோட்டூர்  மலர்வண்ணன், இளவரசன்,   மாலதி, சுப்பிரமணியன் , இளங்கோவன்,  திருத்துறைப்பூண்டி பன்னீர்செல்வம், ஜெயராமன்,  வாசுதேவன், ரவிச்சந்திரன் முத்துப்பேட்டை ஊராட்சியில் ரமேஷ், லெனின்,   சிவக்குமார், தமிழ் சுடர்   உள்ளிட்ட மாவட்ட வட்டக் கழக நிர்வாகிகள்  மற்றும் தோழமை தொழிற்சங்க நிர்வாகிகள் கருப்பு பேஜ் அணிந்து கொண்டு  உண்ணாவிரத போராட்டத்தில் பங்கேற்றனர்.


-செய்தியாளர் தருண்சுரேஷ் 

No comments:

Post a Comment

Post Top Ad