இது ஆங்கிலேயர் காலத்தில் இருந்து பின்பற்றப்படும் நடவடிக்கையாகும்.நான்கு மாவட்டங்களாக பிரிக்கப்பட்ட பிறகு 4 மாவட்ட ஆட்சியர்களின் பரிந்துரையை ஏற்று மேட்டூர் அணை திறப்பதையும், அடைப்பதையும் வாடிக்கையாக பின்பற்றப்படுகிறது. தற்போதைய தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனா நீர் பாசன துறையின் நிர்வாக அதிகாரத்திற்குள் தலையிடுவதும் / தொழிற்சாலைகளுக்கு தண்ணீர் வழங்க வேண்டும் என்கிற உள்ளோக்கோடு குடிநீர் என்ற பெயரால் பயிர்கள் கருகுவதை காப்பாற்ற முயற்சிக்காமல் தண்ணீரை விடுவிக்க மறுப்பது ஏற்கத்தக்கது அல்ல.
சட்டவிரோதமாக நிர்வாக நடைமுறைக்கு புறம்பாக அத்துமீறி நீர்ப்பாசனத் துறையின் நிர்வாகஅதிகாரத்தில் தலைமைச் செயலாளர் தலையிடுவது அதிகார அத்துமீறல் ஆகும். மூத்த அமைச்சர் நீர் பாசன துறைக்கு பொறுப்பேற்றுள்ள போதுகருகும் பயிரை காப்பாற்ற மேட்டூர் அணை தண்ணீரை திறக்க நீர்ப்பாசனத் துறை முன்வர வேண்டும் என வலியுறுத்தி வருகிற பிப்ரவரி 3ஆம் தேதி சனிக்கிழமை காலை 9 மணி முதல் திருவாரூர், நாகப்பட்டினம் , மயிலாடுதுறை, தஞ்சாவூர் மாவட்டங்களில் சாலை மறியல் போராட்டத்தில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் ஈடுபட போவதாக அறிவித்தார்.
இதில் மாநில துணைச் செயலாளர் எம். செந்தில் குமார், மாவட்டத் தலைவர் எம் சுப்பையன், துணைத் தலைவர் எம் கோவிந்தராஜ் | துணைச் செயலாளர் பொ.முகேஷ், கோட்டூர் தெற்கு ஒன்றிய செயலாளர் தெய்வமணி, வடுவூர் செல்வதுரைஒரு லிட்டர் நிர்வாகிகள் உடன் இருந்தனர்
- செய்தியாளர் தருண்சுரேஷ்
No comments:
Post a Comment