மக்களை நாடி, மக்கள் குறைகளை கேட்டு உடனுக்குடன் தீர்வு காண தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் அறிவிக்கப்பட்ட “உங்களைத்தேடி உங்கள் ஊரில்” திட்டம் ஒவ்வொரு மாதமும் நான்காம் புதன்கிழமை மாவட்டத்தின் ஒரு வருவாய் வட்டத்தில் நடைபெற வேண்டும் என அதன் அடிப்படையில் இன்று முதல் ஜனவரி 31 ஆம் தேதி திருவாரூர் மாவட்டத்தில் 2024 ஜனவரி மாதத்திற்கான முகாம் நன்னிலம் வட்டத்தில் காலை 9.00 முதல் நடைபெற்று வருகிறது.
மாவட்ட ஆட்சியர் தங்கியும் கள ஆய்வில் ஈடுபடுவதுடன் அனைத்து அரசு துறை அலுவலர்களும் வருவாய் வட்டத்தில் கள ஆய்வில் ஈடுபட்டு அரசு அலுவலகங்களை ஆய்வு செய்து மக்களின் குறைகளை கேட்டறிந்து, அரசின் அனைத்து நலத்திட்டங்களும் சேவைகளும் தங்கு தடையின்றி தகுதியான மக்களைச் சென்று அடைவதை உறுதி செய்யும் பொருட்டு ஆய்வு மேற்கொள்படவுள்ளது.
அதனடிப்படையில் தமிழ்நாடு முதலமைச்சரின் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் திருவாரூர் மாவட்டத்தில் நன்னிலம் ஒன்றியம் ஆனைக்குப்பம் தமிழ்நாடு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தினையும், ஆனைக்குப்பம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நலவாழ்வு மையத்தினை மாவட்ட ஆட்சியர் தி.சாருஸ்ரீ நேரடி ஆய்வு செய்து குறைகளை கேட்டறிந்தார்.
நன்னிலம் வட்டாட்சியர் அலுவலகத்தில் பராமரிக்கப்பட்டு வரும் பதிவேடுகளையும், வட்டாட்சியர் அலுவலகததில் இயங்கிவரும் இ-சேவை மையத்தினையும், புதியதாக கட்டப்பட்டுவரும் கால்நடை மருத்துவமனையினையும் புதியதாக கட்டப்பட்டுவரும் வட்டாட்சியர் அலுவலகத்தினையும் சார்நிலை கருவூலத்தில் பராமரிக்கப்பட்டுவரும் பதிவேடுகளையும் சார்பதிவாளர் அலுவலகத்தினையும் மாவட்ட ஆட்சியர் திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் அவர்களும் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.
அதனைத்தொடர்ந்து நன்னிலம் தேர்வுநிலை பேரூராட்சியில் தமிழ்நாடு முதலமைச்சரின் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்ட முகாமில் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சியர் பெற்றுக்கொண்டு குறைகளைக் கேட்டறிந்தார். ஆய்வில் மாவட்ட வருவாய் அலுவலர் கு.சண்முகநாதன் திருவாரூர் வருவாய் கோட்டாட்சியர் சங்கீதா, அனைத்துதுறை உயர் அலுவலர்கள் மற்றும் நன்னிலம் வட்டாட்சியர் செந்தில்குமார் உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள் என பலர் கலந்து கொண்டனர்.
- செய்தியாளர் தருண்சுரேஷ்
No comments:
Post a Comment