பொதுமக்களின் பாதுகாப்பு, சட்ட விரோத மற்றும் குற்ற செயல்களில் ஈடுபடும் சமூக விரோதிகளை எளிதில் அடையாளம் காண்பது, போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடுபவர்களை கண்காணிப்பது உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காக திருவாரூர் மாவட்ட எஸ்பி ஜெயக்குமார் உத்தரவின் பேரில் மாவட்டம் முழுவதும் சிசிடிவி கேமராக்களை பொருத்தும் பணிகளில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.
குற்ற வழக்குகளின் புலனாய்வின் போது குற்றவாளிகளை அடையாளம் காண்பதற்கு கண்காணிப்பு கேமராக்கள் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த நிலையில் மன்னார்குடி நகரத்தில் குற்ற சம்பவங்களை தடுக்கும் நோக்கத்தில் மன்னை ராஜகோபாலசுவாமி அரசு கல்லூரி நுண்ணுயிரியல் துறை உதவி பேராசிரியர் ராதிகா மணிமாறன் தனது சொந்த பணம் ரூபாய் 2 லட்சம் மதிப்பில் சிசிடிவி கேமராக்களை டிஎஸ்பி அஸ்வத் ஆன்டோ ஆரோக்கியராஜ் வசம் அளித்தார்.
அப்போது, தஞ்சை மண்டல கல்லூரி கல்வி இணை இயக்குனர் முனைவர் தனராஜன். உள்ளிட்ட காவல்துறை அதிகரிகள் உடன் இருந்தனர்.
-செய்தியாளர் தருண்சுரேஷ்
No comments:
Post a Comment