வலங்கைமான் ஸ்ரீ உண்ணாமலை அம்மன் சமேத ஸ்ரீ அருணாசலேஸ்வரர் ஆலயத்தில் தைப்பூச பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு திருத்தேரோட்டம். - தமிழக குரல் - திருவாரூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Thursday, 25 January 2024

வலங்கைமான் ஸ்ரீ உண்ணாமலை அம்மன் சமேத ஸ்ரீ அருணாசலேஸ்வரர் ஆலயத்தில் தைப்பூச பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு திருத்தேரோட்டம்.


திருவாரூர் மாவட்டம் வலங்கைமான்  ஸ்ரீ  உண்ணாமலை அம்மன் சமேத  ஸ்ரீ  அருணாசலேஸ்வரர் ஆலயத்தில், தைப்பூச பிரமோற்சவ விழாவை முன்னிட்டு பத்து நாட்கள் விழா நடைபெற்று வருகிறது. நேற்று காலை ஆறு மணிக்கு ஜபம், ஓமம், யாகசாலை பூஜைகள், தீபாராதனை நடைபெற்றது. அதனை தொடர்ந்து ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

தேரில் எழுந்தருளி வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். முக்கிய ரத வீதியில் தேர் சுற்றி வர  பக்தி பரவசத்துடன் பக்தர்கள் தேரை இழுத்தனர். பின்னர் மாலை 6.30 மணி அளவில் தேர் நிலையை அடைந்தது. 


மாலை ஆறு மணிக்கு சிறப்பு பூஜைகள் செய்து, தீபாராதனை நடைபெற்றது. இவ்விழா ஏற்பாடுகளை ஆலய நிர்வாக அதிகாரி அ.ரமேஷ், பரம்பரை அறங்காவலர்  வலங்கைமான் கே. நடராஜன்&  சகோதரர்கள், சென்னை ஜி சுப்பிரமணியன்,  உபயதாரர் திருப்பூர் இந்தியன்   ஸ்டீல்ஸ் உரிமையாளர் எஸ்.கே. மணி (எ)துரை,  வலங்கைமான் ஸ்ரீ அருணாசலேஸ்வரர் நற்பணி மன்ற அறக்கட்டளையினர் சிறப்பாக செய்திருந்தனர். 


- செய்தியாளர் தருண்சுரேஷ் 

No comments:

Post a Comment

Post Top Ad